பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 131

இருந்து விட்டால் ச ர் வ. லோகங்களும் வேலையில்லாமல் ஒய்ந்து ஸ்தம்பித்துதான் நிற்க வேண்டும். அவர் தம்முடைய மகதி யாழின் இன்னிசைக்கு இடையிடையே உச்சைசிசவத் தின் வசையையும் பரப்பிக் கொண்டே சென்றார். அமர லோகம் முழுவதும் இரகசியம் பரவி விட்டது. இந்திரன் அகலிகையைக் .ெ க டு த் தா ன்; இந்திர வடா க ன ம் வடவையைக் கெடுத்தது எ ன் ற பேச்சுப் பிரம்மலோகம் முதலிய வேறு லோகங்களிலே பரவலாயிற்று. எங்கும் இதே

பேச்சு.

வாயு பகவான் இதைக் கேட்டார். வடவைத் தீயின்

பக்கத்திலே போகும்போது, சர்வ லோகங்களையும் தகிக்கும் அச்கினி ஸ்வரூபமாக நிற்கும் நீயே காமாக்கினி யால் தாக்கப்பட்டாயென்பது ஆச்சரியமல்லவா?’ என்று இரங்கினார். -

'ஐயோ! ந - ன் தெரியாமல் இந்தத் தீச்செயலில் இறங்கினேன். இனி என் செய்வேன்! இந்தப் பழி என்னை இதோடு விடுவதாகத் தெரியவில்லையே! இந்த அசந்தர்ப்ப சம்பந்தத்துக்கு ஒர் அடையாளங் கூட ஏ ற் படு ம் ப்ோல் இருக்கிறதே என்று வடவை அழுது புலம்பியது. அது கர்ப்பமாக இருக்கிறதென்ற செய்தியை அக்கினிசகாயர் தெரிந்து .ெ கா ண் டு தம் ைக க ளால் மெல்லத் தடவிக் கொடுத்துச் சமாதானம் செய்து விட்டுச் சென்றார்.

பிறகு நாரதர் வந்தார் : குசலப் பிரச்னம் செய்தார்: 'ஆஹா! உன்னுடைய த வ மே தவம்! தேவலோகத்தில் உள்ள அசுவராஜாவின் உள்ளம் கவர்ந்த உன் பெருமையே பெருமை! வேறு யாருக்கும் கிடைக்காத பாக்கிய மல்லவா உனக்குக் கி ைட த் தி ரு க் கி ற து?' என்று மெல்ல ஆரம்பித்தார். . -

வடவைக்கு ஆத்திரம் வந்தது; கோபம் பொங்கியது: நாரதராக இல்லாதிருந்தால் அ ப் போதே பொசுக்கிச் சாம்பலாக்கி இருக்கும். தி ரி ேலா க சஞ்சாரியும் தவ ராஜருமாகிய அவருக்கு முன் அதன் சினம் என் செய்யும்’ ஒன்றும் செய்ய முடியாமல் ஹோவென்று புலம்பியது.