பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罩32 கர்த்த ப விஜயம்,

  • மஹரிஷே! என்னைக் குத்திக் காட்ட வேண்டாம் . நான் புண்பட்டு நிற்கிறேன். அந்தப் புண்ணிலே கோலை இடுவது போல் நீங்கள் பேசுவது தருமமா?! என்று அழுது கொண்டே கேட்டது.

குதிரைக் கன்னியே, இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? அப்படி இருந்தாலும் அந்தத் தவறு உன்னும் டையதல்லவே? உச்சைசிரவம் வந்து பேசத தொடங்கினால பேசாமல் மெளனமாக இருக்க யாருக்குத்தான் முடியும்? இந்திர லோக வாசிகளுக்கு இந்த மாதிரியான செயல்கள் இயல்பே. நீ அதைரியப் படாதே. உன்னை ஒருவரும் குறை கூற மாட்டார்கள் .

வடவைக்கு சிறிது ஆறுதல் உண்டாயிற்று. தன் மனத் திலுள்ள கவலையை ஆற்றிக் கொள்ள எண்ணி, அப்படி யானால் என்னுடைய கெளரவத்திற்குப் பங்கம் நேராது என்றா சொல்கிறீர்கள்?’ என்று, கேட்டது.

"அதிலென்ன சந்தேகம்? மே ற் .ெ கா ண் டு ஒரு விசேஷமும் இல்லாதிருந்த ல் உலகம் இதை மறந்து விடும். மீண்டும் நீ கன்னித் தன்மையை அடைவாய் , ' - வடவை ஏ தோ சொல்ல வாயெடுத்தது! பேச வர வில்லை ஆனாலும் சொல்ல வந்ததைச் சொல்லியே தீர வேண்டுமென்று தோன்ற வே மி க வு ம் நாணத்தோடு, 'மஹரிஷே, மேற்கொண்டு ஒரு விசேஷமும் இல்லாமல் இருக்க முடியாது போல் இருக்கிறதே! நான் இப்போது

" அப்படியா தெரிந்து கொண்டேன். தேவலோகத் துக்கு மற்றோர் உச்சைசிரவம் கிடைக் கப் போகிறது. அதை இந்திர குமாரனுக்குக் கொடுத்து விடலாம் .'

'தபோநிதி, என்னை இப்படித் தங்கள் வார்த்தை களால் சித்திரவதை செய்யக் கூடாது பூலோகத்திலுள்ள மனிதர்களுக்குக்கூடக் கர்ப்பிணியென்றால் இ க் கம். உண்டாகும். தாங்கள் என்னுடைய துக்கத்துக்குச் சமனம் கிடைக்கும் மார்க்கத்தைச் சொல்ல வேண்டும்.'

'சரி உனக்குப் பிறக்கும் கு ழ ந் ைத தெய்வ.