பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 36 கர்த்தப விஜயம்

அந்தம் வரையில் அந்தக் குதிரைகள் தெரிந்து கொண்டு இருப்பதை அவர் உணர்ந்தார்.

"அது கிடக்கட்டும் ; தேவராஜாவுக்கு வாகனம் உச்சை சிரவம் ; தேவராஜாவின் குமாரனுக்கு அதனுடைய குமாரன் வாகனமாக வந்தாலும் வரலாம். ஆகையால் அந்த உச்சை சிரவ சிசுவுக்கு நீங்கள் கதி பழக்கி வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !'

அந்த ஏழு குதிரைகளில் இதுவரைக்கும் பேசாமல் எல்லாவற்றையும் மெளனமாகக் கேட்டுக்கொண்டு வந்த பெரிய குதிரைக்கு இந்த வார்த்தை எரிச்சலை உண்டாக் கியது. ஏழு குதிரைகளில் நடுநாயகமாக விளங்குவது அது. * மகரிஷே, பழியின் ஸ்வரூபமாகத் தோன்றப் போகிற அந்தப் பிராணிக்குச் சாரியும் கதியுமா பழக்கித் தர வேண்டும்? போதும் போது ம். அதன் முன்கால்கள் முன்னே சென்றால் பின் கால்கள் பின்னே செல்லவேண்டும். பழியினால் குன்றிப்போய் நிற்க வேண்டும்' என்று அது வரையில் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டியது. அடடா என்ன வார்த்தை சொல்லுகிறாய்! சாபம் அல்லவோ கொடுத்து விட்டாய்! இங்கே நிற்பதில் பிர யோசனம் இ ல் ைல; நான் போய் வருகிறேன்' என்று நாரதர் திரும்பிப் பாராமல் புறப்பட்டு விட்டார். பஜனை பண்ணிக் கொண்டே சென்றவர், அமராவதியில் இந்திரன் அரண்மனையில் உச்சை சிரவம் இருக்கும் இடத்திற்குப் போனார். அப்போதுதான் உதயமாகி இருந்தது. உச்சை சிரவம் இரவெல்லாம் உறக்கமின்றி மனம் கலங்கி நின்று கொண்டிருந்தது. நாரதர் அதைக் கண்டவுடனே, ஹே அசுவ ராஜாவே, அழு உடனே அழு; வைகுண்டத்துக்கு ஒடிப் போய் அழு; அப்பொழுதுதான் உன் மானம் நிற்கும். இப்பொழுதே பே ா ய் உன் உடன் பி ற ந் த ரீதேவியின் காலில் விழுந்து ஏதாவது வழி கேள். உன் குழந்தை, வடவை வயிற்றிலே பிறக்கப் பே கி ற கு ட் டி, நன்றாக இருக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டு வா. இல்லா விட்டால் குதிரை முகம் படைத்த தேவர்