பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அவலக்ஷணத்தின் விலை

யால் ஒரு கால் என்னை மறந்திருக்கலாம். என்னுடைய அவலக்ஷணம் அவ்வளவு சீக்கிரம் மறப்பதற்குரியதென்று. நான் நினைக்கவில்லை. நான் ஊரை விட்டு வந்து விட்ட பின்பு நீயும் பிறரும் என்னைப் பற்றிப் பலவாறாக, நினைத்திருக்கலாம். என்னுடைய அவலக்ஷணம் எனக்கே அருவருப்பை உண்டாக்கி இ ந் த உலகத்திலிருந்தே, மறைந்து விடச் செய்திருக்கும் என்பது போன்ற எண்ணங்: கள் எ ழு வ து சகஜந்தான்! ஆனால் கடவுள் புண்ணியத். தால் என்னுடைய அவலக்ஷணம் நீடுழி வாழ வேண்டும். என்று வாழ்த்துகிறேன். நீயும் 'ததாஸ் து' என்று சொல், ஏன் தெரியுமா? நான் இந்த உலகில் வாழ நிலையான காரணம் வேண்டுமென்றால் அது என் அவலக்ஷண உருவமே யாம்; இதில் சிறிதேனும் பொய்யில்லை. .

என்ன..! நான் சொல்வது ஒ ன் று ம் உனக்கு விளங்கள் வில்லையல்லவா ? நல்லது ; இந்த அவலக்ஷணம் எனக்குப் பெரிய அதிருஷ்டத்தை உ ண் டா க் கி யிருக்கிறது. நீ இதை நம்பு வ த ற் கு இடம் இராது. ஒரு சமயம் அவ. லக்ஷணப் பரிசு ஒன்றை ஏற்படுத்தி உலகிலேயே மிகவும். அவலங்ணமுள்ளவர்களுக்கு அதனைக் கொடுப்பதாகச் சில: கனவான்கள் முன்வந்தார்களென்றும். அது யாரோ ஒரு ஸ்திரீக்குக் கிடைத்ததென்றும் நீ கேட்டிருக்கலாம். அந்த, மாதிரி ஒரு பரிசு ஆண்களுக்குள் அவலட்சண சிகாமணிக்குக் கொடுப்பதாக ஓர் இயக்கம் உண்டாயிருக்கலாமென்று நீ நினைக்கலாம். அந்த மாதிரி சமாசாரம் ஒன்றும் இல்லை .

நானே உழைத்துச் சம்பாதித்துவருகிறேன். கெளரவ. மான வேலை என்னுடைய பெயரும் பிரசித்தப்பட்டு வருகிறது. ஓகோ ஏதாவது பத்திரிகையின் ஆசிரியர் அல்லது பிரசங்கியாகப் போயிருக்கலாம் என்று அவசரப் பட்டு எண் ணி வி டா .ே த. பத்திரிகாசிரியருக்குப் புகழ் கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல. பிரசங்கியிாருக்குக் கிடைக்கும் புகழின் ஒரு பங்கு அவருடைய லட்சணத்திற்கும். ஆடம்பரத்திற்கும் சொந்தம். ஸ்திரிகள் செய்யும் பிரசங்கத்