பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - 丑4密

திற்கும் கதைகளுக்கும் அதிகமான கூட்டம் கூடுவதும் மெடல்கள் விழுவதும் உருவத்திற்கும் பிரசங்கத்திற்கும நெருங்கிய ச ம் ப ந் த ம் இருப்பதைக் காட்டவில்லையா ? எனவே, நான் பிரசங்கம் செய்ய ஆரம்பித்தால் என்னுடைய அவலக்ஷணம் குறுக்கே நின்று ஒருவரையும் வரவொட்டாமல் கதவைச் சார்த்தித் தாழ் ப் பா ள் போட்டுவிடுமே : என்னுடைய உத் தி யோ கம் இவைகளுக்கெல்லாம் மேலானது. என்னுடைய உயர்ந்த அவலட்சணமே அந்த உத்தியோகத்திற்கு உரிய யோக்கியதை.

செப்பிடு வித்தைக்காரன் ஜாலம் செய்வது போல் எழுதுவதாக எண்ண வேண்டாம். எனக்கு இப்பொழுது மாதம் ஐந்நூறு ரூபாய் வருகிறது. என் பெயரும் படமும் பத்திரிகைகளில் வருகின்றன. இந்த நிலை எப்படி எனக்கு வந்ததென்று அறிய விரும்புவாய் ; சொல்லுகிறேன். கேள்:

நான் ஊரைவிட்டுப் புறப்பட்டவுடன் சென்னைக்கு வந்தேன். சென்னையில் என் உருவத்தோடு சஞ்சாரம் செய்ய நாணினேன். கையில் இருந்த பணம் செலவழிந்த பிற்பாடு பசி கொடுக்கும் சாட்டை அடியை என்னால் பொறுக்க முடியவில்லை. எங்கேயாவது ஒரு வேலையில் அமரலாம் என்றாலோ வேறு உடம்பு வேண்டும். ஏன் சென்னைக்கு வந்தோம் என்று எண்ணினேன். இப்படிப் பசியோடும் ஆலோசனையோடும் ஒரு தெரு வழியே நடந்து கொண்டிருந்தேன். பைத்தியக்காரன் கூடப் பத்துப் பேர்’ என்றபடி என்னுடைய போட்டிபோட முடியாத அவலசஷ்ன ரூப தரிசனம் செய்து கொண்டு பல பேர்கள் என்னைத் தொடர்ந்து வந்தார்கள். அழகைத்தான் பார்ப்பதுண்டு : அவலகஷ்ணத்தை ஏன் இவர்கள் பார்க்கிறார்கள் ?’ என்று நினைத்தேன். எவ்வளவோ இடங்களில் அழகைப் பார்த்து இருந்தாலும் என்னைப் போன்ற அவலக்ஷண உருவத்தை எங்கும் பார்த்தே இருக்க மாட்டார்கள் ஆதலின்ால் என். னுடைய அவலக்ஷணம் ஒரு புதுமையாக இருந்தது.

திடீரென்று ஒர் ஆள் என்னை அழைத்துக் கொண்டு. ஒரு பெரிய கட்டிடத்திற்குள் சென்று கனவான் ஒருவரிடம் விட்டான்.