பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. - 13

தாவல்தான். 'இதோ, உங்கள் விருப்பப்படியே செய்து விட்டேன். நான் ஏழை எங்கள் பரம் ப ைர ச் சொத்து இது. துணிந்து செய்து விட்டேன். கொஞ்சம் தயவு வைக்க வேண்டும் ' என்று .ெ சா ல் லி க் கொண்டே தம் துணியில் முடிந்திருந்த வஸ்துவைத் தீட்சிதர் கொடுத்தார். ரத்தின வியாபாரி அந்த இ ர ண் டு மணிகளையும் எழுந்து நின்று வாங்கிக் கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

தீட்சிதர்வாள், ! சந்தோஷம் ! நான் இரண்டாயிரம் என்று சொன்னாலும், மூவாயிரம் தருவதாகவே எண்ணி வைத்திருக்கிறேன். இதோ தருகிறேன்’ என்று சொல்லிப் பெட்டியைத் திறந்து மூன்று கட்டு நோட்டுக்களை எடுத்துப் போட்டார் : முப்பது நூறு ரூபாய் நோட்டுக்கள் ! -

கூட இரண்டு துணையாட்களோடு தீட்சிதர் வீட்டிற்கு விரைந்து வந்தார். அவருடைய இ ரு த ய ம் என்றும் இல்லாத வேகத்தில் அடித்தது. வந்து கைப்பெட்டியில் பணத்தை வைத்துப் பூட்டினார் வேகம் அடங்கவில்லை. மங்கி எரிந்த வெளிச்சத்தைத் தூண்டினார். ராஜராஜேசுவரி விக்கிரத்தைப் பார்த்தார். அங்கே என்ன இருக்கிறது? ஜோதி போய் விட்டது , ஜீவன் மறைந்தது : . - ஹா!' என்று ஒரு முறை வீ ரி ட் டு க் கத்தினார் தீட்சிதர். எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள் . தீட்சிதர் மூர்ச்சை போட்டுக் கிடக்கிறார். விசிறிக் குளிர்ந்த நீரைத் தெளித்துப் பரிகாரங்களைச் செய்து தெளிவிக்கையில் சரியாகச் சூரியோதய காலம். -- - - - - - - - . . . . .

கண்ணைத் திறந்தார் தீட்சிதர். வாசலுக்கு நேரே உதய சூரியனுடைய பொன்னிறமான ஜே தி ைய ப் பார்த்தார். திடீரென்று துள்ளி எழுந்தார் ; அதோ: அதோ ! நீலம் ர த் தி ன மா. க மாறிவிட்டது !' என்று ஓடினார். பாவம் அவருக்குப் ைபத்திய ம் பிடித்து விட்டது! .