பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 149*

வகையில் உதவுவதற்குரிய ஸ்தாபனம் ஒன்றை நிறுவலாம். என்பது என் உத்தேசம். அதற்குரிய யோசனை உனக்கு ஏதாவது தெரிந்தால் எழுத வேண்டும்.

என்னுடைய பல வேஷங்களின் படங்களைத் தனித். தபாலில் அனுப்பி யிருக்கிறேன்......

ருசி கண்ட பூனை

கமலம், நான் எவ்வளவோ தடவை சொல்லி வாய். வலியெடுத்ததுதான் பிரயோசனம். படிப்பில் உனக்குக் கொஞ்சங் கூடப் பிரியமில்லை. அந்தக்கதைப் புஸ்தகத்தை வாங்கிக் கொண்டு வந்து ஒரு மாசம் ஆகிறது. இன்னும் வாசித்து முடித்த பாடில்லை. என்னுடைய மனைவி வாசிக்க வேண்டுமென்று கெளரவமாக மட்டும் சொல்லி வாங்கி வந்து விட்டேன். இங்கே உனக்கு அடுப்பு ஊதுவதில் தான் பிரியம் இருக்கிறதே ஒழிய ஒழிந்த நேரங்களில் எதையாவது எடுத்து வாசிப்போம் என்ற எண்ணமே இருக்கிறதில்லை. - - -

என்னை நீங்கள் குற்றம் கூறுவதில் என்ன பிரயோ சனம்? எனக்குப் படிப்பதில் பி ரி ய ம் இல்லையா? தினத் துக்கு ஒரு புஸ்தகம் வாசித்துத் தீர்த்து விட மாட்டே ாை?" இங்கே வருவதற்கு முன் எங்கள் அகத்தில் எவ்வளவோ புஸ்தகங்கள் வாசிக்கவில்லையா? எ ன் ன செய்வேன்! அகத்து வேலையை எல்லாம் செய்துவிட்டு வீண் பொழுது போக்குவதில் எனக்குக் கொஞ்சங் கூடப் பிரியமில்லை. உங்களுக்கு நான் பகில் சொல்வேனா? அத்தைக்குப் பதில் சொல்வேனா? அவர்களுக்குப் புஸ்தகத்தின் ருசி கொஞ்ச மாவது தெரியவில்லை. அந்த ரஸம் தெரிந்தால் என்னை