பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 15

வந்திருக்கிறேன். என்னுடைய கவிதா ரசத்தை அறிந்து அனுபவிப்பதற்கு உங்களைவிடத் தகுதியானவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்?' என்றார் போத்தன்னா.

'ஸ் ேத த் தி ர ம் இருக்கட்டும். உ ன் னு ைடய காவியத்தை ஆரம்பி, பார்க்கலாம்.'

கவிஞர் ஆரம்பித்தார். கஜேந்திர மோட்சத்தை முதலில் இருந்து தொடங்கி வாசித்து வந்தார். அப்படி வாசிக்கும் போது அவருடைய கை அசைப்புகளும் உடம்புக் குலுக்கும் நிறுத்தி நிறுத்திச் செய்யும் வியாக்கியானமும் அவருடைய உள்ளத்தே பொங்கிய உத்சாகத்துக்கு அடையாளங்களாக இருந்தன. ரீநாதர் அப்பொழுது அப்பொழுது சபாஷ் போட்டுக் கொண்டிருந்தார். சில இடங்களில், அவ்வளவு ரசமாக இல்லை' என்று கூசாமல் சொல்லி வி டு வ சிக் "இங்கே பிராசம் இன்னும் போட்டிருக்கலாம்’ என்று குறிப்பிடுவார்.

கஜேந்திரன் மடுவில் இறங்கியதும், முதலை அவனைப் பற்றிக் கொண்டதும், யானையரசன், ஆதிமூலமே!’ என்று கதறியதும் விரிவாக வருணிக்கப் பெற்றிருந்தன. அடிக்கடி கவிஞர், கவனித்தீர்களா? கவனித்தீர்களா?” என்று மைத்துனரைக் கேட்டுக் கொண்டே வந்தார். * இனி மேல் கொஞ்சம் நன்றாகக் கவனியுங்கள்’’ என்று கூறி விட்டுப் போத்தன்னா வாசித்தார். - -

'ஆதிமூலமே!’ என்று அலறிய யானையின் முழக்கம் பூநீவைகுந்தத்தில் திருமகளோடு அளவளாவிக் கொண்டு இருந்த திருமாலின் காதில் விழுகிறது; அவர் திடுக்கிட்டு விளையாட்டை நிறுத்தி உடனே யானையைக் காப்பாற்றப் புறப்பட்டு விடுகிறார். -

இந்தக் கட்டத்தில் கவிஞர் தாம் எழுதிய கவிதையை வாசிக்கலானார் : - - -

"தி ரு ம க ளி ட த் து ம் சொல்லவில்லை; சங்கு சக்கரங்கள் இரண்டையும் திருக்கரங்களில் கொள்ள, வில்லை; ஏவலர் யாரையும் அழைக்க வில்லை : பகஷி ராஜனையும் கூட்டிக் கொள்ளவில்லை. இருகாதடியிலும் .