பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 19%

வாயில் அகப்பட்டான் என்றவுடன் அந்தப் பெருமானுக்கு இருந்த வேகத்தில் கருட வாகனத்தில் ஏறாமல் வந்தான் என்பது த வ றா? சங்கு சக்கரத்தைத் தரிக்கவில்லை. என்றால் அபசாரமா? அவைகள் எல்லாம் இல்லாமல் உடனே ஒடி வந்தான் என்றால், அப்படிச் சொல்வது தீனர்களை ரட்சிப்பதில் அவனுக்கு இருக்கும் தீவிரத்தைக் காட்டவில்லையா? நான் அப்படிச் சொல்லி யிருப்பது தவறு என்றீர்களே. இப் பெ ர் முது யோசித்துப் பாருங்கள் : உங்கள் பிள்ளையைக் காப்பாற்றுவதற்காக விழுந்தடித்துக் கொண்டு ஓடினிர்களே. சாதாரணமான நி ைல யி ல் ‘பூரீநாதர் வஸ்திரம் தரிக்காமல் குண்டலங்கள் அணியாமல் கெள பீனதாரியாக ஓடினார்’ எ ன் று .ெ சா ன் னா ல் பொருத்தமாக இராதுதான். ஆனால் தம் குழந்தையைக் காப்பாற்றுவதற்காக அவர் அப்படி ஓடினாரென்றால் அது: தானே இயற்கையாகப் படும்?... என்ன பேசவில்லை.

எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டு வந்தார். யூரீநாதர் அவர் மனக்கண்முன் கஜேந்திரனது பரிதாபமான காட்சி தோன்றியது. காதில் ஆதிமூலமே என்ற ஒசை கேட்டது பகவான் ஒட்டமும் நடையுமாகத் தன் மேலிருந்த திருமகளின் மேலாக்கு நுனி வேகத்திலே கொடிபோல பறக்க, வரும் கோலம் தென்பட்டது. போத்தன்னா, நீதான் கவி, உனக்கு வாஸ்தவத்திலே வாக்தேவியின் அருள் இருக்கிறது. நான் குறை கூறியது தப்பு. இப்போதுதான் அந்த வேகத்தை நான் உணர முடிகிறது. வியாஸ்பகவான் இங்கே இருந்தால் உன்னை மிகவும் பாராட்டுவார். நீ" சிரஞ்சீவியாக இருக்க வேண்டும் ' என்று வாழ்த்திக் கொண்டே அந்தக் கவிஞரைத் தழுவப் போனார்.

'மறுபடியும் உங்களை மறந்து விட்டீர்களே ! உங்கள் உடம்பிலுள்ள எண்ணெயை என்மேலே பூசிவிடுவீர்கள் போல் இருக்கிறதே!' என்று நகர்ந்து கொண்டார் போத்தன்னா. -o- .