பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜகத் மித்யை!

என்னுடைய மாமா கதை எழுதுவதில் கைகாரர். அவருடைய கதை இயற்கையைச் சித்திரிப்பது; உள்ளத் திலே பொங்கியெழும் உணர்ச்சியைச் சொற்கோவைகளிலே அடக்கிக் காட் டு வ து. அவர் கதைகள் காவி ய கதியை వీ_6) LtL శ) )!, -

போன வருஷம் அவர் க ம ல ேஜ தி' என்னும் பத்திரிகையின் வருஷ மலருக்கு ஒரு கதை எழுதி யிருந்தார். அடடா அதற்குத்தான் எத்தனை புகழ் மாலைகள் 'ஏன் சார். அந்தக் குருட்டுத் தேவி யை எப்படிச் சிருஷ்டித் தீர்கள்? உங்களுக்கென்று தனி யாக ஒரு கற்பனை தோன்றுகிறதே என்று ஒரு நண்பர் புகழ்கிறார். என்ன கதை வேண்டியிருக்கிறது சார் ? உங்க ள் குருட்டுத் தேவி'க்கு அப்புறம் தமிழில் கதையே இல்லை சார் ’’ என்பது ஒரு நண்பரின் மதிப்புரை. -

குருட்டுத் தேவி வந்தாலும் வ ந் த து; எங்கள் மாமாவுக்கு ராத்திரியும் பகலும் கதை எழுதுவதே வேலை யாகி விட்டது. வருஷ மலர், ஆண்டு மடல், அந்த பூர்த்தி பத்ரம், தீபாவளி இகழ், பொங்கற்பூ, சங்கராந்தி மஞ்சரி. கார்த்திகைச் சுடர், மங்கள வெளியீடு- இப்படி ஊர்ப்பட்ட அநுபந்தங்களுக்கும் வி ேச ஷ மலர்களுக்கும் எழுதும்

நிர்ப்பந்தத்தில் அவர் சிக்கிக்கொண்டார்.

அவரே கதை எழுத வே ண் டு ம் என்பதென்ன? நாமும் ஏன் எழுதக் கூடாது?’ என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். எங்கள் மாமா கதை ஒரு பத்திரிகையிலே வெளி வந்தால், அதை வாசித்த மறுகணமே நானும் கதை எழுத உட்காருவேன். அவர், ரோஜாப் பூ வி ன் மணம் என்று கதை எழுதி இருப்பார்; நான் அதே மாதிரி எருக்கம் பூவின் நாற்றம்’ எ ன் று எழுத ஆரம்பிப்பேன். எழுதுவதற்கு முன் இரண்டு மணி நேரம் தீர்க்காலோசனை செய்வேன். கதை எழுதிவிட்ட மாதிரியும், அது பத்திரிகை :யில் வந்த மாதிரியும், எனக்கும் கதையுலகில் ஒரு தனி