பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 2 to

ஸ்தானம் கிடைத்து விட்ட மாதிரியும் கனவு காண்பேன். சாப்பிடும் போதும் அந்தக் கற்பனைதான்; கத்தரிக்காய் கறி வி ட் டி ல் பண்ணியிருப்பார்கள்; சாப்பிடும் போது கற்பனையில் என் உள்ளம் ஊறியிருப்பதனால், 'அந்த எருக்கம்பூக் கறி போடு' என்று சொல்லி விடுவேன். எங்கள் அம்மாமி இடி இடியென்று சிரிப்பாள். காலேஜுக்குப் போகும் போதும் படிக்கும் போதும் எல்லாம் இதுவே ஞாபகம். ராத்திரி சரியாக ஏழு மணிக்கே சாப்பிட்டுவிட்டு எழுதுவேன்; இரண்டு வரிகள்: மூன்று வரிகள் கூட எழுதி விடுவேன். அப்புறம் து க் க ம் வந்துவிடும். அன்றோடு * எருக்கம் பூவின் நாற்றம் மறைந்து விடும்.

எங்கள் மாமா எழுதிய 'காமுவின் கல்யாணம்’ என்ற கதை பத்திரிகையில் வந்த அன்று என்னுடைய கற்பனா சக் தி மறு படி யு ம் பொத்துக் கொண்டு கிளம்பியது: * கோமுவின் கல்யாணம்’ என்று எழுத எண்ணினேன். சீ சீ மாமா ஒரு பெண்ணின் கல்யாணத்தைப் பற்றி எழுதினால் நாமும் அதையே காப்பி அடிக்கக் கூடாது. நாம் சீனுவின் கல்யாணம்’ எ ன் று எழுத வே ண் டு ம். சீனுவைப் புருஷனாக வைக்க வேண்டும். (பின்னே சீனு பெண்ணா?) கல்யாணம் எதற்கு? கார்த்திகை, தீபாவளி, ஆறு மாத கூடிவரக் கல்யாணம் ஏதாவது வைக்கலாம், இப்படியே என்னுடைய சிந்தாை ர த ம் பரந்த வான வெளியிலே ஒரு லட்சியம் இல்லாமல் பறந்தது. கடைசியிலே பாட்டியின் அழுகை என்று ஒரு கதை எழுதுவதாகத் தி ர்மா னித் தே ன். எதிர் வீட்டிலே உள்ள குப்பிச்சிப் பாட்டியின் அழுகையைக் கேட்டு அனுபவித்தவன் நான். ஆதலால் அதைத் தத்ரூபமாக வ ர் ணி த் து கதைக்கு ஜீவகளை உண்டாக்கிவிட வேண்டுமென்று எண்ணினேன். பாட்டி அழுதது என்னவோ அவள் பே ர னு ைடய * பிணக் களை'யைப் பார்த்துத்தான் - -

அப்பாடா! ஒரு நாள் பெருங்காய விளம்பரம் அல்லது குமாரசாமியின் கோலாகலம்' என்று ஒரு கதையை ஒரு விதமாக எழுதி முடித்தேன். அன்றைக்கு எனக்கு இருந்த