பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: ஜகத் மித்யை!

ஆனந்தத்திற்கு எ ல் ைல யே இல்லை. ஏன், நாமும் பத்திரிகைக்கு எழுதிப் பணம் சம்பாதித்து வீடு க ட் டி க் கொண்டு கார் வாங்கி உல்லாசமாக இருக்கும் நிலையை அடையக் கூடாது? நாமும் ஒரு கதாசிரியன்தானே?' என்ற வீறாப்பு என் உச்சந் தலைக்கு ஏறியது. என் மார்பை ஒரு முறைப் பார்த்துக் கொண்டேன். என் கதையைப் படிக்கப் படிக்க அதில் அபூர்வ ர ச ைன க ள் இருப்பதாகக் கண்டேன்.

எங்கள் மாமாவுக்குத் தெரிந்த பத்திரிகைக்காரர்கள் யாவரும் எனக்கும் தெரிந்தவர்கள். எங்கள் வீட்டில் வாரந்தோறும், ஒ வ் .ெ வ | ரு ஞாயிற்றுக் கிழமையிலும் யாராவது வருவதுண்டு. மாமாவின் கதையைப் பற்றிய விமர்சனப் பேச்சிலே அவருடைய பொழுது போய் விடும். சில சமயங்களில் நாலைந்து பேர்கள் கூடிவிடுவார்கள். அப்புறம் அவர்களுடைய கொம்மாளத்திற்குக் கேட்க வேண்டுமா? - - -

என்னுடைய பெருங்காய விளம்பர’க் க ைத ைய அபூர்வ விகடன் ஆசிரியரிடம் கொண்டு போய்க் காட்டி னேன். அவர், நான் கதையை எழுதினேனென்பதைக் கேட்டவுடன், அப்படியா சபா ஷ் ! அப்படித்தான் எழுதிப் பழக வேண்டும்' என்று அதை வாங்கிப் படித்துப் பார்த்தார். அடுத்த பத்திரிகையிலேயே வெளியிட்டு வடுகிறேன்: இனிமேல் ஒவ்வொரு பத்திரிகைக்கும் தவறாமல் கதை எழுதி வரவேண்டும்' என்று சொல்லப் போகிறா ரென்றே எதிர்பார்த்தேன். சரி; இருக்கட்டும். இன்னும் வேறு பல கதைகள் எழுது. இது அவ்வளவு நன்றாக இல்லை என்று அவர் சொன்னார்.

நான் எவ்வளவு உயர மாக மனக்கோட்டை கட்டி னேனோ அவ்வளவும் இடிந்து விட்டது. அஸ்திவாரங்கூட வானத்திலே தூள் தூளாய்ப் பறந்து விட்டது. ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டு விடலாம் போல ஆத்திரம் வந்தது : சி! இவரும் மனிதரா? மரியாதை தெரியவில்லை : அவ்வளவு நன்றாக இல்லையாம் ! எவ்வளவு? மரக்காலில்