பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி , வா. ஜ. 23

கதையின் ரசத்தை அளந்து பார்த்தாரோ என்று திட்டிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தேன். அப்புறம் ஒரு வாரம் பேசாமல் இருந்து விட்டேன்.

அடுத்த வாரம் முருங்கைக்காய் சாம்பார்’ என்ற கதையொன்றை எழுதி முடித்தேன். அது என்னுடைய இரண்டாவது கதையாக இருந்தாலும் முதல் தரமாக இ ரு ந் த து. முன்பு எழுதின கதை மட்டமென்று இந்தக் கதையை எழுதின பிறகு தான் எனக்குப் பட்டது. ஆனால் இந்தக் கதையோ ? உலகத்தில் சிறந்த கதைகளில் ஒன்றாக எண்ணப்பட வேண்டும் ! ஒவ்வொரு பத்திரிகை அயிலும் மதிப்புரையைப் பெறக் கூடியது. வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது! - இ ந் த மா.தி ரி என் எண்ணங்கள் வளர்ந்தன . .

அதை எடுத்துக்கொண்டு, கோமாளி ஆசிரியரிடம் போனேன். அவர் படித்துப் பார்த்தார் அப்பனே இது எங்கள் பத்திரிகைக்கு லாயக்கில்ல்ை. இதிலே என்ன ரசம் இருக்கிறது ?' என்று அவர் சொன்னார்.

எனக்குக் கோபம் வந்தது ; அடக்கிக் கொண்டேன். வெறுமனே அந்தக் கர்வம் பிடித்த ஆசிரியருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டு போக என் மனம் சம்மதிக்கவில்லை. இ தி .ே ல என்ன இ ல் ைல ?’ என்று ஒரு .ே க ள் வி போட்டேன். - -

'இதிலேயா ? கதைக்குப் ப்ளாட் இல்லை. பாவம் இல்லை. முடிவு நன்றாக இல்லை. ஏதோ முருங்கை மரம் வைத்ததும், காய் பறித்ததும், சா ம் பார் சாப்பிட்டதும் இருக்கின்றனவே ஒழிய, கதைப் போக்காக ஒன்றும் இல்லை’ என்றார். - . . " - - -

நீ நாசமாய்ப் போக ' என்று மனத்துக்குள் திட்டி விட்டு நான் வீட்டுக்குப் போனேன். எனக்கு இ ரு ந் த உற்சாகமெல்லாம் போய் விட்டது. அன்று ராத்திரி சாப்பிடக் கூட மனம் பிடிக்கவில்லை. "இந்த உலகம் பொய்யுலகம். நல்ல வஸ்துவுக்கு மதிப்பில்லை’ என்று எண்ணினேன்.

”10酒量ff வந்தார் ; ஏன் சாப்பிடவில்லை r" என்று -