பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 29.

அவர் பாடத் தொடங்கியது முதல் வழக்கம் போல நான் அப்பாட்டில் ஈடுபட்டேன். அவர் மனம் ஒன்றிப் பாடினார்; மெல்ல மெல்லச் சொற்களைச் சுவைத்து இசையினிமை அற்றுப் போகாமல் இணைத்து இணைத்துப் பாடினார். அவர் பாடுகையில் தம்மை மறந்திருந்தார். அங்கே நின்று கேட்ட நானும் என்னை மறந்திருந் தேன். பாட்டை அவர் நிறுத்திச் சிறிது நேரம் மெளன மாக இருந்தார். பாட்டு நின்றது எனக்குத் தெரியாது. கண்ணை மூடிய படியே கேட்டு வந்த எனக்குப் பாட்டு இன்னும் ஒலித்துக் கொண்டுதான் இருந்தது. பாட்டின் இனிமையைப் பூ ர ன மாக அனுபவிக்க அந்த மெளன நிலையும் அவசியமென்றே தோன்றியது.

என்ன சொன்னேன்?' என்று அவர் ஒரு கேள்வி யைப் போட்ட போதுதான் கண்ணைத் திறந்து பார்த்தேன். சதானந்தர் கண்களில் நீர்த்துளிகள் மல்கியிருந்தன. அவர் உள்ளத்திலே பொங்கி எழுந்த இன்பத்தின் திவலைகள் அவை. அப்போது அவர் முகத்திலே தோன்றும் களையே தனியாக இருக்கும்; தாமரை மலர்ந்தது போல இருக்கும். அது பக்தியா, ஞானமா, ஆனந்த ப ர வ ச மா இன்ன தென்று சொல்லத் தெரியவில்லை. அவர் அனுபவிக்கும் அந்த ஆனந்தத்தில் ஒரு துளி நானும் சுவைத்துப் பார்த்தேன். தம்மை ம ற ந் த மனோலயத்தில் அவர் ஆழ்ந்திருந்தார். என்னையும் ஒரு கணம் ஆழ்த்தி விட்டார். அதைத் தேடிக் கொண்டுதான் நான் அடிக்கடி அவரிடம் வருவது. வேதாந்த தத்துவங்களைச் சொல்லி உ ண் ைம இன்னதென்று நிரூபிக்க அவருக்குச் சக்தி உண் டோ இல்லையோ, மந்திரோபதேசம் செய்யும் தகுதியை அவர் பெற்இருந்தாரா இல்லையோ எனக்குத் தெரியாது. அவரிடம் அந்த விஷயங்களைப் பற்றி நான் பேசிய து இல்லை; அவரும் தாமாகப் பேசுவதில்லை, கர்ம மார்க்கம், ஞான மார்க்கம், யோக நெறிகள் இவற்றைப்பற்றி உபநிஷத் துக்கள் முதல் சித்தர் பாட்டு வரையில் மேற்கோள் காட்டி வாதாடும் பண்டித சந்நியாசிகளைப் போன்றவரல்லர் அவர். அவருக்கு வைத்தியம் தெரியும். தேவார திருவாச்.