பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - விடுத ைல

கங்களிலும் தாயுமானவர் பாடல்களிலும் அருட்யாவிலும் அவர் உருகி ஒரே பைத்தியமாக இருந்தார். அவற்றைப் பாடிப் பாடி அவர் மனம் கரைந்து போய் விட்டது.

அவர் சங்கீதம் மிக விசித்திரமானது. அதற்குச் சுருதி இ ல் ைல; தாளமில்லை. முதலில்லை; மு டி வி ல் ைல. ஆனாலும் அது இணையற்ற சங்கீதமாக விளங்கியது. அவர் பாடல் சொல்லும்போது அவருடைய வ க் கு ம் உடம்பும் மனமும் ஒன்றுபட்டு நிற்கும். பாட்டிலே இசையும் பொருளும் சேர்ந்து இணைந்து உள்ளத்தைக் கவ்வும் . கானத்திலே மோனத்தை உண்டாக்குவார்; மோனத்திலே கானத்தைக் காட்டுவார். அவருடைய கானம் தேவகானம்; நேரே உள்ளத்தைத் தொடும் இசையமுதம்.

என்ன பேசாமல் இருக்கிறீர்கள்? நாம என்ன பேசிக் கொண்டிருந்தோம்?’’ என்று மீண்டும் கேட்டார்.

அவருடைய இசை வழியே மிக மிக உயர்ந்த வெளி யிலே உடல் பாரம் தெரியாமல் மிதந்து கொண்டிருந்த நான் இந்த உலகத்திற்கு வந்தேன். அவர் கேள்வியைக் காது கேட்டும் அதன் பொருளை மனம் தெரிந்து கொண்டு பதில் சொல்லச் சிறிது நிதானம் வேண்டியிருந்தது. அதுவும் ஒரு ரஸவாதம்தானோ? r

வந்து விட்டேன். நாமா? நாம் ரஸவாதத்தைப் பற்றிப் பே சி க் கொண்டிருந்தோம்’ எ ன் று நான் சொன்னதைக் கேட்டு அவர் கலகலவென்று த ம க் கு இயல்பான வெண்கலச் சிரிப்புச் சிரித்தார்; வந்து வி ட் டே ன் என்கிறீர்களே; எங்கே போயிருந்தீர்கள்?’’ என்று கேட்டு மீண்டும் சிரித்தார் .

"எங்கேயா நீங்கள் அழைத்துச் சென்ற ஆனந்த லோகத்திற்கு' எ ன்று .ெ ச ல் லி நானும் சேர் ந் து சிரித்தேன். -

"ச ரி, விஷயத்துக்கு வருவோம். இப்போதுதான் எனக்கு நன்றாக ஞாபகத்துக்கு வ ரு கி ற து. மறந்து போனதை ஞாபகப் படுத்திக் கொள்வது சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் ஞாபகப் படுத்திக் கொண்டு