பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 விடுதலை

உபநிஷத்து வாக்கியங்களின் மொழிபெயர்ப்பை ஒப்பிக் கிறவர்போல அவர் பேசினார் ; ஆனால் அந்தப் பேச்சிலே வீரம் இருந்தது. ஆவேசம் வந்தவரைப் போல அவர் பேசினார்.

'இன்னும் சந்தேகம் தெளிந்தபாடில்லை’ என்று அவர் வீரவாசகத்தினிடையே .ெ ம ல் லி ய தொனியிலே கூறினேன். அது அவர் காதில் விழுந்திருக்கும் என்பது சந்தேகந்தான். -

இனிமேல் இந்தச் சரீரம் ஓர் இடத்தில் இராது ; ஒரு வேலையைச் செய்யாது. இந்த ஆத்மா அகண்டத்தை தா டி ப் போய்க் கொண்டே இ ரு க் கு ம். முடிவற்ற பிரயாண்த்தைத் தொடங்கப் போகிறது. ஆம். முடிய வில்லை; முடிவே இல்லை. முடிவு வந்தால் முடிந்த முடிவு தான். '

'இன்றைக்கு இவர் ஏதாவது கஞ்சா கிஞ்சா சாப்பிட்டு இருப்பாரா !” என்ற பைத்தியக்கார எண்ணம் என் மனத்தில் எழுந்தது. அடுத்த கணமே, என்ன பாதகமான நினைவு 1 என்று கன்னத்திற் போட்டுக் கொண்டேன்.

அப்போதுதான் அவர் சிறிது தம் பேச்சை நிறுத்தி னார். எனக்கு ஆவேசம் வந்துவிட்டதாக எண்ணிக் கன்னத்திலே போட்டுக் கொள்கிறீர்களா? அப்படியானால் கற்பூரம் கொண்டு வாருங்கள்’’ என்று சொல்லிப் பழைய படி சிரித்தார். சிறிது நேரத்திற்குமுன் இருந்த மாற்றம் அந்தச் சிரிப்பிலே இல்லை.

'என்ன இது! இன்று என்ன ஒருவிதமாக இருக் கிறீர்களே! புரியாத பாஷையில், இதுவரையில் நீங்கள் சொல்லாத வார்த்தைகளைச் சொல்கிறீர்களே ! விஷயம் என்ன?’ என்றேன். - 'சரி; சொல்கிறேன், வாருங்கள்; உள்ளே போகலாம். பொழுது மறைந்து விட்டது' என்று சொல்லி உள்ளே சென்று தீபத்தை ஏற்றினார். நா னும் அ வ ை த் தொடர்ந்து உள்ளே சென்றேன். w