பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - விடுதலை

அதிக ஞாபகம். அந்தப் பக்கத்து ஊர்களில் அந்த சாமியாரைக் குழந்தை முதல் கிழவர் வரையில் யாவருக்கும் தெரியும். எல்லோரும் அ வ ைர த் தெய்வம் போல ப் பாராட்டுவார்கள் .

மருந்து செலவுக்காகவும் ஏதோ ஒரு தர்மத்துக்காகவும் அவர் பணம் வாங்குவார்; அதாவது நோய் குணமடைந்த வர்கள் மனமுவந்து தானாகவலிந்து கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொள் வார்; அவராகக் கேட்டு வாங்க மாட்டார். ஏழை எளியவர்களுக்கு எவ்வளவு விலையுயர்ந்த சரக்கானா லும் வாங்கி மருந்து செய்து தர்மத்துக்குக் கொடுப்பார்.

ஒரே ஒரு கட்டுப்பாடு அவர் வைத்திருந்தார். வைத்திய சம்பந்தமாகப் பணம் தந்தால் பெற்றுக் கொள்வதைத் தவிர வேறு ஏதாவது வஸ்துவை யாரேனும் அவருக்குக் கொடுத்தால் பெற்றுக் கொள்ள மாட்டார்; திராட் சைப் பழமானாலும் சரி, கற்பூரமானாலும் சரி, த மா. க வே. பணம் .ெ கா டு த் து வாங்குவாரேயல்லாமல் பிறரிடமிருந்து வாங்க மாட்டார். யாரேனும் பார்க்க வருபவர்கள் கையுறை யாகப் பழங்கள் கொணர்ந்தால் அவற்றை அருகிலுள்ள குழந்தைகளுக்குக் கொடுத்து விடுவார். - தமக்குச் சாப்பாடு அனுப்பி வந்த வீ ட் டி ற் கு அவர் மாதந் தோறும் பணம் கொடுத்து வருவதாகக் கேள்வி. ஆனால் அதைத் தெரிந்து கொள்ளும் அக்கறை யாருக்கும் இல்லை. அந்த விட்டுக்காரர் சைவர் : ஏழை ஏதோ ஒரு பலசரக்குக் கடையிலே கு மா ஸ்தா வாக இருக்கிறார் . குடும்பம் பெரியது. அவர்கள் வீட்டிலிருந்து சாப் ப டு வருவித்து உண்பதென்றால் நிச்சயமாக சதானந்தர் பணம் கொடுத்து விடுவாரென்பதில் என்ன சந்தேகம்?

அ வருக் கு வைத்தியத்தினால் வ ரு ம் பண ம் சாமான்யமாக ஒரு பெரிய குடும்ப ஸ ம் ரவு ைண செய்வதற்கு ஏ ற் ற த க இருக்குமென்பது என் மதிப்பு. "அந்தப் பணத்தை அவர் சே ர் த் து வைக்கிறாரா? எதற்காசச் சேர்க்கிறார்? ஏதாவது தர்மத்திற்கு அனுப்பு கிறாரா? அப்படி அனுப்பினால் அதை அனுப்பும் சந்தர்ப்.