பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 41

சாமர்த்தியம் கஷ்டத்தை வெளிக்காட்டாமல் சகித்துக் கொள்ளும் பொறுமை எல்லாவற்றிலும் அவ ள் முன் நின்றாள்.

'அண்ணா, என் தங்கத்தை உன்னிடம் ஒப்பித்து விட்டேன் ; நீ குடிக்கிற க ஞ் சி யோ, கூழோ எனக்குப் போதும். இவளை மாத்திரம் கண்ணைக் கசக்காத ஒர் இடத்தில் சேர்த்துவிடு’’ என்று தங்கத்தின் தாய் அழுது கொண்டே அடைக்கலம் புகுந்தாள்.

"நீ எதற்காக அழுகிறாய் அம்மா ? நீ எனக்கு ஒரு பாரமா ? தங்கந்தான் பாரமா ? அசடே அவளுக்கென்ன குறைச்சல்? நான் இருக்கிறேன், உன்னைக் கவனித்துக் கொள்ள, தம்பி இருக்கிறான் தங்கத்தைக் கவனித்துக் கொள்வான்' என்று அபயமளித்தார் வைத்தியநாதம் பிள்ளை.

அவர், தம்பி இருக்கிறான் : தங்கத்தைக் கவனித்துக் கொள்வான் என்ற பேச்சிலே பொடி வைத்துப் பேசினார். அவரும் சரி, தங்கத்தின் தாயும் சரி. அந்தப் பேச்சுக்கு ஒ ேர வி த மா ன பொருளைத் தான் எண்ணினார்கள் : சதாசிவம் தங்கத்தை மணம் செய்து கொண்டு காப்பாற்று வானென்றுதான், குல வழக்கத்திலே ஊறிப்போன அந்த இரண்டு உள்ளங்களும் நினைத்திருக்கும். ஆனால் அவர் அதைச் சொன்ன மாதிரி நன்றாக இல்லை; நல்ல சூசக மாகப்படவில்லை. அவர் தம் தங்கையைக் கவனித்துக் கொள்வதற்கும் சதாசிவம் தங்கத்தைக் கவனிப்பதற்கும் வித்தியாசம் இல்லையா? இரண்டையும் ஒன்றுக்கொன்று உபமானமாக வைத்துப் பேசுவது போலச் சொன்னாரே; இது எப்படிப் பொருத்தமாக இருக்கும்? அவர் அவளைச் சகோதரி என்ற உறவு பற்றிக் கவனிப்பார். சதாசிவம் தங்கத்தைக் காப்பாற்றுவதற்குக் காரணமான உறவும் அதுதானா ? நிச்சயமாக அப்படி ஒருவரும் எண்ணியிருக்க மாட்டார்கள். - - -

ෆ & - (O థిర . ද්දා శ3ళ

நீ - 3