பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விடுதலை

ரஸவாதப் பைத்தியத்தால் உடைமை இழந்தார்: உள்ளம் இழந்தார்; கடைசியில் உடலும் இழந்தாா. சதாசிவம் தனியே இருந்தான். அந்தத் தனிமை அவனுக்குப் பிடிக்க. வில்லை, இந்தப் பாரத பூமி முழுவதும் சுற்றிவர வேண்டும் என்ற சங்கற்பம் எழுந்தது. -

முன்பே அவன் துறவிதான் ; ஒர் ஊரிலே ஒரு வீட்டிலே சிறைப்பட்டுக் கி ட க் க அவன் மனம் இ. ட ம் கொடுக்க வில்லை. தன் வீட்டை விற்று அந்தப் பணத்தை ஏ ைழ எளியவர்களிடம் வீசிவிட்டுக் கையைத் தட் டிக் கொண்டு: வானவெளியே கூரையாக உ ள் ள வியனுலக வீ ட் டி ற். குடியேற எண்ணியிருந்தான். இந்த எண்ணம் வளர்ந்து முற்றுப் பெறுந் தருணத்தில் தங்கத்தினிடமிருந்து ஒரு ஆள் வந்தான் . . . -

'தங்கம்மா ப டு த் த படுக்கையாக் கிடக்குது. உங்க. கிட்டே ஒரு வார்த்தை சொல்லணுமாம். உயிர் போற. வங்க ஆசையை நிறைவேத்தாமப் போனா அ து பெரிய பாவம்னு சொல்லச் சொல்லித்து ' என்று அவன் கூறிய செய்தி சதாசிவத்தின் சிந்தையைக் க லக் கி வி ட் ட து. தங்கமென்ற ஒருத்தி இருக்கிறாளென்பதை அவன் மறந்: திருந்தான். இப்போது அவள் மரண்ாவஸ்தையில் இருக் கிறாளென்பதைக் கேட்டபோது அவன் உள்ளே புதைந்து இருந்த ஏதோ ஒர் உணர்ச்சி கிளர்ந்தெழுந்தது.

போகலாமா, வே ண் டா மா என்று ஒரு கணம் யோசித்தான். தங்கத்தின் பொறுமையும் உத்தமமான குணங்களும் நினைவிலே மிதந்து வந்தன. ஒரு முடிவுக்கு. வந்தவனைப் போல் தங்கம் இருந்த கி ர | ம த் ைத அடைந்தான். -

அவள் படுத்த டடுக்கையாகக் கிடந்தாள். போய்ப் பார்த்தான். அவனுக்கு அடையாளமே தெரியவில்லை. உடம்பு வெறும் எலும்பும் தோலுமா இருந்தது. அவள் லம்பூர்ண எழிலோடு விளங்கின போதும் அவளை அவன் பார்த்திருக்கிறான். ஆனால் அப்போது அந்த எழிலைப் பருகும் தாகம் அவ ன் கண்களுக்கு இல்லை. அவை,