பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. . 47

அவளிடம் குலுங்கிய அ ழ ைக க் காண மறுத்தன. இப்போதோ அவன் கண் க ன் தங்கத்தின் உ ட ம் ைப நோக்கின. அவளுடைய உடலி ல் ஒவ்வோரங்குலமும் வேதனையால் வெம்பி கருகிக் கிடந்தது. வ ய சி ன ல் வந்ததல்ல அந்த விகாரம். - - -

சதாசிவத்துக்கும் இருதயம் உண்டு, உணர்ச்சி உண்டு, முகத்திலே கண்கள் உண்டு என்று அப்போது தான் தெரிய வந்தது. அவள் அழகுருவத்தைக் கண்டு ஸ்தம்பித்து" போகாத அவன் உள்ளம் அவள் விகார உருவத்தைக் கண்டு உணர்வற்று நின்றது. அவள் தன்னோடு நெருங்கிப் பழகியபோது ஒதுங்கி நின்ற அவன் மனம் அவள் விலகி நின்றபோது அவளை அணுகியது. முன்பு அவள் கண் களிலே தோற்றிய உல்லாச லாகிரியை அவன் ஏறிட்டும் பார்க்கவில்லை. இன்று அந்த லாகிரியெல்லாம் போய் வேதனைகளெல்லாம் தேங்கி நின்ற குழிகளாக இருந்தன அந்த விழிகள். அவை அவன் ம ன த் ைத உருக்கின : உலுக்கின; முன்பு .ெ சய் த பராமுகத்துக்குத் தண்டனை கொடுப்பதுபோல அவன் உயிரையே வாட்டின.1

அவனுக்கு அப்போதுதான் காதல் என்பது உடலுக்கும். உலகுக்கும், உள்ளத்துக்கும் புற ம் பே உயிரில் ஊடுருவி நிற்கும் நுண்பொருள் என்ற உண்மை புலப்பட்டது.

தங்கம். என்னை அழைத்தாயாமே!’ என்று அவன் நடுங்கியபடியே கூ றி னான். அவளுடைய உள்ளக் கோயிலில் எழுந்தருளியிருந்த அன்புத் தெய்வத்தின் முன் அவன் நடுங்கத்தான் வேண்டியிருந்தது.

அத்தான் வந்து விட்டீர்களா! நான் உய்ந்தேன்! என் வாழ்வு பழுத்தது. இந்த அபாக்கியவதியின் கடைசி வேண்டுகோளுக்குச் செவி கொடுத்து வந்தீர்களே !...” அவளுக்குப் பேச முடியவில்லை ; மேல் மூச்சு வாங்கியது : உள்ளத்திலே குமுறிக் கொண்டிருந்த துக்கமோ, அவனைக் கண்டதிலே உண்டான ஆனந்தமோ அவள் கண்களில் நீர் வெள்ளத்தைப் பெருக்கியது. அன்புதான் க ைர ந் து ஊற்றாக வெளிப்பட்டதோ? யார் அறிவார்கள்!