பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 63、

இப்பொழுது அ வ ைன த் தேடுவாரில்லை. சிறுபசங்கள் கிளம்பி விட்டார்கள் மந்திரமில்லை , மாயம் இல்லை கண்ணுக்கு அழகாக இருந்தால் போதும் . இப்படி ஆகிவிட்டது காலம். இவ்வளவு நாள் பணத்துக்காக அந்தச் சிற்பி விக்கிரகங்களை அமைத் தான். இப்போது: ஆத்மார்த்தமாக ஒன்றை இயற்ற எண்ணினான்.

அவனுடைய சொந்த ஊரிலே காலையில் எழுந்து: இருந்தால் கண்ணுக்கு முன்னே நிற்கும் கு ன் றி ன் முகத்திலே விழிக்க வேண்டும். அந்தக் குன்றை அவன் அறிவு வந்தது முதல் தினந்தோறும் பார்த்துக்கொண்டு: தான் இருந்தான். அப்பொழுதெல்லாம் அவன் கண்கள் அந்தக் குன்றைப் பார்த்தன , கருத்து. பார்க்கவில்லை,

பணத்துக்கு வேலை செய்யும் காலம் போய் ஒய்வாக இளைப்பாறிக் கொண்டிருந்த அவனது முதுமைப் பருவத்தில் ஒரு நாள் அந்தக் குன்றைப் பார்த்தான். சதா சிற். றுளியால் நுண்ணிய சிற்ப சிருஷ்டியைச் செய்து வந்த தன் கை இப்போது வேலை ஒன்றும் இல்லாமல் துருப்பிடித்துப் போவதை அவன் விரும்பவில்லை. அன்று பார்த்த அந்தக் குன்றின் காட்சியிலே ஒரு குறை அவன் கண்ணுக்குப் புலப் பட்டது. இது எவ்வளவு அழகான குன்று இருந்தும் என்ன பயன் ? இதை யார் போற்றுகிறார்கள் ? திலகம் இல்லாத நெற்றி போலவும் மதியில்லாத வானம் போலவும்: இது சூன்யமாக இருக்கிறது. இதன் மேல் ஒரு கோயில் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் !" என்ற எண்ணம் அவனுக்கு உண்டாயிற்றோ இல்லையோ, அவன் தன் முதுமையையும் மறந்து துள்ளிக் குதித்தான். 'வேலை இல்லாமல் மரத்துப்போன என் கையின் சூன்யத்தையும் இந்தக் குன்றின் சூன்யத்தையும் போக்க முயல்வேன்' என்று உடனே சங்கற்பம் செய்து கொண்டான். தனிக் குடிசை கட்டினான். சுவடிகளைக் கொண்டு போ ய், வைத்தான். நல்ல கல்லாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டு: