பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 岱8岁

" என்ன காரணங்களால் இந்த விஷயங்கள் உனக்குத் தெரிந்தன?’’

காரணம் சாதாரணந்தான். நான் சொல்லும்போது ஆச்சரியமாகவே இருக்கும்; .ெ கா. ஞ் ச ம் மூளையை உப யோகித்துப் ப ர் த் த ல் சாதாரணமாக எல்லோருக்கும் நெரிய வரும்.' -

நான் மூளையில்லாதவனென்று அவன் நி ைன த் து அப்படிச் சொன்னானென்று நீங்கள் எண்ண வேண்டாம். தன்னுடைய ஆ ைள அவ்வளவு சிறந்ததென்பதை வேறு வகையாக அவனால் தெரிவித்துக் கொள்ள முடியவில்லை! *சொல்கிறேன் கேள் : இ வ. ைர ப் பார்த்தவுடனே இவருடைய நெட்டையான ஆகிருதியில் ஒரு சிறு கூனல் தென்படுகிறது. இது உ ட ம் பி லே உண்டானதல்ல. குனிந்து குனிந்து பழகியதால் இப்படியாகி யிருக்கிறது. குனிந்து குனிந்து பேசிக் கொண்டிருந்தால் இப்படித்தான் ஆகும். இவர் மிகவும் சுவாரஸ்யமாகத் தினந்தோறும் ஒருவரோடு பேச வேண்டுமென்றால் அவர் இவருடைய மனைவியாகத்தான் இருக்க வேண்டும். அவளோடு தினந் தோறும் குனிந்து குனிந்து பேசும்படி அவள் குட்டையாக இருப்பதனால்தான்.இவருக்குக் கூனல் உண்டாயிருக்கிறது. கனல் விழ வேண்டுமானால் பல வருஷங்கள் குனிந்து கொண்டு பேசிய வழக்கம் இருக்க வேண்டும் ; அதனால் இவருக்கு இளைய வயசிலேயே அந்தக் குட்டையான மனைவி இவரோடு வாழத் தொடங்கி யிருக்க வேண்டும். இவ்வளவு சிரத்தையாக இவர் குனிந்து பேசுவதும் அவள் வார்த்தைகளைக் கேட்பதுமாக இருப்பதில் இவருடைய மனவொற்றுமையும் விளங்கவில்லையா ? இதை முட்டாள் கூட ஊகித்து விடலாமே." -

மறுபடி என்னை முட்டாளென்று அவன் திட்டுவதாகச் சந்தேகம் கொள்ளாதீர்கள்! - ,

! உங்களுக்குக் குழந்தைகள் உண்டோ?’ என்று கணபதி அவரை நோக்கிக் கேட்டான்.

"அதையும் நீயே சொல்லிவிடேன்' என்றேன். நான்.