பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 . பரிவ ர்த்தனை

வளர்ச்சி, அழகான கண்கள் ஆகியவை அந்தக் கவர்ச்சிக்குக் காரணம். இவைகளுக்குமேல் அவன் அணிந்திருந்த கால் பூட்ஸ்", அதன் வாய்க்கு விளிம் பு இட்டவைபோன்ற வெள்ளிக் காப்பும் கொலுசும், வெல்வெட்டு நிக்கர் , மேலே நல்ல சட்டை-இந்த ஆடை வகைகளும் அந்தச் சின்னஞ் சிறு உருவத்தைப் பின்னும் அழகுடையதாகச் செய்தன.

அந்தக் குழந்தைக்குத் தாயாக இருக்கும் பாக்கியம் பெற்ற லகஷ்மியும் நல்ல அழகிதான். அவள் கழுத்திலும் காதிலும் கையிலும் இருந்த நகைகள் ஆடைகள் எல்லாம் அவள் செல்வம் நிறைந்த கு டும் ப த் தி ல் வாழ்க்கைப் பட்டவள் என்பதை எடுத்துக் காட்டின.

வண்டி நகர்ந்தவுடன் அந்தக் குழந்தை கீழே நின்ற வரைத் தன் கையால் சுட்டிக்காட்டி, 'மாமா.... மாமா !

என்று சொல்லிக் கேள்வி கேட்கும் பாவனையில் தன் அம்மாவின் முகத்தைப் பார்த்தான். 'மாமா ஏன் வர வில்லை?” என்ற அர்த்தம் அந்தப் பார்வைக்கு இருக்கலாம். "மாமா நா ைள க்கு வருவா’ எ ன்று ல சஷ் மி பதில் சொல்லிக் குழந்தையை ஒரு முத்தமிட்டாள்.

குழந்தையும் தாயும் சேர்ந்து அளித்த காட்சி அழகாக இருந்தது. அந்த வண்டியில் அ ம ர் ந் தி ரு ந் த நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

"ஏம்மா, ஆம்புளைத் துணை யாரும் இல்லையா?* என்று ஒரு கேள்வி புறப்பட்டது. அவர்களுக்கு எதிரே குழந்தையோடு உட்கார்ந்திருந்த பெண் தான் அ ந் த க் கேள்வியைக் கேட்டாள். - - - 5g! ஸ்டேஷனுக்கு அப்புறம் எறங்கப் போறோம், அதுக்குப் புருஷாள் துணை எதுக்கு? ஸ்டேஷனுக்கு ஐயர் வந்திருப்பார்’ என்று வயசு முதிர்ந்த பெண் ம ணி பதிலுரைத்தாள். - 'எந்த ஊருக்குப் போவனும்?' என்று மறுபடியும் கேள்வி :வந்தது. . -- -

'நாங்களா? எலமனுாருக்குப் போகனும்.: