பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

களின் மேல்தளத்திலும், சிலசமயங்களில் ஆழ்நீரின் அடித் தளத்திலும் சஞ்சரித்தபோது எழுதியவை இவை. மனம் பறவை போலப் பறந்த கால்த்தும், நிர்ப்பந்தத்தால் இரண்டு நாட்களுக்குள் எழுதவேண்டுமென்ற குறட்டின் வாய்க்குள்ளும் எழுதிய கதைகள் இதில் இருக்கின்றன. ஆகவே இதிலே பஞ்சும் இருக்கும் இரும்பும் இருக்கும்: பழமும் இருக்கும்; கோதும் இருக்கும். பழமும் கோதும் சேர்ந்த உருவத்திலேதான் கனி இயற்கையிலே கணிகிறது. இந்தத் தொகுதி அப்படிக் கனிந்ததென்று உங்களுடைய நல்ல மனசு நினைக்க இடமுண்டென்றால். அது என் ப்ாக்கியம் 1 இல்லை, நான் அப்படி எண்ணமாட்டேன்’ ன்ன்று சொல்லிக் கொண்டித்தனம் செய்ய நீங்கள் திச்சயம் செய்து விட்டால், ரஸிக சுவாமி ! உங்களுக்கு ஒரு நமஸ்காரம் இந்த ஜனநாய்க யுகத்திலே நீங்கள் அப்படி நினைக்கவும் சொல்லவும் உங்களுக்குப் பூர்ண் சுதந்திரம் உண்டு. குஷாலாக உங்கள் கண்டனத்தையும், நீக்கீசர் வாதத்தையும் வெளியிடுங்கள்' என்று சொல்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால் ஒன்றை மட்டும் உங்கள் திருச்செவியில் ஒத விரும்புகிறேன். இந்தக் கதைகளில் திருட்டு இல்லை. எல்லாம் அன்போடு எழுதிய வை. எழுதினோமென்ற திருப்தியை இறுதியிலே எனக்கு அளித்தவை என்பதை 'ம்ட்டும் சொல்ல வேண்டுமென்பது என் ஆசை.

இக்கதைகளில் ஹ ஸ் யம்' என்ற சரக்கைத் தாங்குவன சில இருக்கின்றன. அவற்றில் ஆழம் இல்லை என்று நானே முந்திக் கொள்கிறேன். கர்த்தப விஜயத்'தை :ம்ாத்திரம் இதற்கு விலக்காகக் கொள்ள வேண்டும். "கருணையின் வேகம் தெலுங்கு நாட்டுக் கதையைக்கேட்டு மேருகிட்ட உருவம். சிற்பியின் கனவு’ என்பதில் உள்ள் பாடல் என் சொந்தப் பாடல் அன்று. உண்மையாக அது ஒரு புராணத்தில் உள்ள பாட்டு. அதைப் படித்தபோது என் மன்ம் கண்ட பகற்கனவுதான் இப்போதுள்ள என் கதை. - - - -