பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 - பரிவர்த்தனை

காணாத வயிறுமுடைய அந்தக் குழந்தை மிகவும் சாதுவாக உட்கார்ந்திருந்தது.

இரண்டு தாய்மார்களும் எ ன் ன என்னவோ பேசிக், கொண்டிருந்த போது இரண்டு குழந்தைகளும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டன. ராஜா சட்டென்று திரும்பிப் பார்த்து, பாப்பா, அதோ பாப்பா என்று எதிரேயுள்ள குழந்தையைக் காட்டினான்.

அந்த வார்த்தையைக் கேட்ட அந்தப் பே ைத க் குழந்தை தன் தாயின் முகத்தை ஆவலோடு பார்த்தது. அவள் முகத்தில் சந்தோஷம் நிரம்பிக் காட்டியது ; சின்ன ஐயரு!’ என்று தன் குழந்தைக்கு அவள் ராஜாவைப் பழக்கம் செய்து வைத்தாள். -

ராஜா ஒரு நிமிஷம் சும்மா இல்லை என்ன என்னவோ தன் மழலைச் சொற்களால் பொரிந்து கொண்டிருந்தான் எல்லாரும் கேட்டுக் கேட்டுச் சிரித்தார்கள். அப்பொழுது எல்லாம் லகஷ்மிக்கு உ ண் டான மனத்திருப்தி இவ்வளவு அவ்வளவென்று .ெ சா ல் ல முடியாது. நடு நடுவே தன் ணுடைய சந்தோஷம் எல்லையை மீறி விட்டால், போக்கிரி!" என்று :மெல்ல அவன் கன்னத்தில் ஒரு தட்டுத் தட்டுவாள். பாட்டி தன் கையிலுள்ள பையிலிருந்து ஒரு பிஸ்கெட் எடுத்து ராஜா ைக யி ல் கொடுத்தாள். அவன் அதை வாயில் வைத்துக் கடித்தான். எதிரே உட்கார்ந்திருந்த, குழந்தை அங்கலாய்ப்போடு அதைப் பார்த்தது. அந்த அம்மாளுக்குப் பந்தி வஞ்சனை செய்வது பாவமென்று தெரியவில்லை. ராஜா அதில் பாதி கடித்து விட்டு மற்றும் ஒரு பாதியை ஏழைக் கு ழ ந் ைத் யி ட ம் நீட்டினான். அக்குழந்தை அதைக் ைக நீ ட் டி வாங்க முயன்றது. விழுந்து விடுமோ என்ற பயத்தால் அதன் தாய் அதை வாங்கித் தன் குழந்தைக்குக் கொடுத்தாள். அதுவரையும் கண்டறியாத ருசியை அது அனுபவித்துக் கொண்டிருந்தது. இன்னும் ஒரு பிஸ்கோத்தைப் பா ட் டி பேரனுக்குக் கொடுத்தாள். அதையும் அவன் பாதி கடித்து மற்றொரு