பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 7 to

விட்டதாகத் தோற்றியது. உண்மையில் அப்படி நேரவில்லை. புயல் வேறு பக்கம் திரும்பி விட்டது. - - ர ஜ த ன் ைக யி ல் இருந்த சிறு பிஸ்கோத்துக் துண்டை வாயில் போட்டு விழுங்கி விட்டுத் தன் தோழன் பக்கம் கையை நீட்டி, தா’’ என்ற போது எங்களுக் கெல்லாம் தூக்கி வாரிப் போட்டது. கொடுத்து வாங்கும் ஸமரஸ் குணத்தைக் கடவுள், மனிதர்களுக்கு இயல்பாகவே அமைத் திருக்கிறார் போலும்! -

"சீ கழுதை! அது ஒனக்கு ஆண்டாம்' என்று லக்ஷ்மி" அந்தச் சிறு ைக ைய இழுத்துக் கொண்டாள். ர ஜா மறுபடியும் ைக ைய நீட்டி, 'தா' என்றான். ஏழைத் தோழக் குழந்தை தன் தாயின் முகத்தைப் பார்த்தது.

கொடுக்கலாமா?’ என்று தான் அ தன் உள்ளத்தில் கேள்வி எழுந்திருக்க வேண்டும். - " உனக்கு வாணாம், சாமி' என்று எதிரே இருந்த

பெண் ராஜாவுக்குச் சொன்னாள்.

அவன் கேட்கவில்லை; அப்பிச்சி தா' என்று மட்டும். அந்தக் குழந்தையிடம் கை நீட்டினான். இப்போது அவன் குரலில் பிடிவாதம் ஏறியது. -

"அது ஆய்; ஆண்டாம்! இந்தா பிஸ்கோத்து" என்று பாட்டி மற்றொரு பிஸ்கோத்தை எடுத்து அவ ன் கையில் கொடுத்தாள்.

ராஜா அதை வாங்கி வீசி எறிந்து விட்டு, 'பாப்பா, அப்பிச்சி தா’ என்ற பல்லவியை ஆரம்பித்து விட்டான். லசுஷ்மிக்குக் கோபம் கோபமாக வந்தது. * . -

முதலில், ராஜா கடித்துத் தந்த பிஸ்கோத்தை அவன் தோழக் குழந்தை எவ்வளவு ஆவலாக வாங்கிக் கொண்டது! அதன் தாய் எவ்வளவு பூரிப்படைந்தாள் இ ப் .ே பா து: மாத்திரம் இந்த முரண்டுபாடு எதற்கு? - என் சிந்தனை சுழன்றது. - - - - ... . . . . . . -

ராஜா அ ழு ைக க்கு அடியிட்டான். லசஷ்மி நல்ல வார்த்தை சொன்னாள், மிரட்டினாள். பா ட் டி எ ன் ன என்னவோ சொன்னாள். எதிரே இருந்த பெண் ணு ம்.