பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi

அஹிம்சை', 'கர்த்தப விஜயம்" என்ற இரண்டும் ஆனந்த விகடன் தீபாவளி மலர்களிலும், உயர்ந்த சித்திரம், என்பது தி ன ம ணி ஆண்டு மலரிலும் வெளி யானவை. பிராயச்சித்தம் எ ந் த ப் பத்திரிகையிலும் ஏறாதது. மற்றவை யாவும் கலைமகளில் மலர்ந்தவை . இவை வெளியாவதற்குக் காரணமான யாவர்பாலும் நன்றி பாராட்டுகிறேன். -

இது, என் சிறுகதைத் தொகுதிகளில் இரண்டாவது, ஆயினும் நான் முதலில் எழுதிய க ைத க ள் பல இதில் உள்ளன. இனியும் பல கதைகள் எழுதத்தான் போகிறேன். ரஸிகராகிய உங்களுக்குத் தொல்லை கொடுக்கத்தான் போகிறேன். எல்லாத் தொல்லைகளையும் பொறுத்து இன்பமாகக் காணும் இயல்பு உங்களுக்கு உண்டென்பதை நான் நிச்சயமாக உணர்வேன். தமிழ் நாட்டின் இலக்கிய சிருஷ்டியிலே உங்களுக்குள்ள ஆர்வத்தையும் பற்றையும் அறிவேன். எந்தச் சிறு முயற்சியானாலும் மிகவும் ஆசை யோடு பார்த்து அநுபவித்துப் பா ரா ட் டு ம் உங்களை எண்ணித்தான் கதைகளை எழுத்தாளர்களாகிய நாங்கள் எழுதுகிறோம்.

இது, உங்களைத் தட்டிக் கொடுக்க சொல்வதல்ல. உண்மையைத்தான் சொல்கிறேன். இ ந் த க் கல்யான குணங்கள் நி ர ம் பி ன மூர்த்திதானே ரஸிகர்’ என்ற திருநாமத்துக்கு ஏற்றவர் ? - -

இந்தப் புஸ்தகத்தை அ ழ க க அச்சிட்டு, தமிழ் நாட்டுச் சிறுகதைகள்' என்ற வரிசையிலே சேர்த்து வெளி யாக்கின அல்லயன்ஸ் கம்பெனியாருடைய அன்பைப்பற்றித். தனியே நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. என் நன்றியை அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்ங் னம்,

அன்பன்

கி. வா. ஜகந்நாதன்