பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 83

பெற்ற தாய்க்கல்லவா பிள்ளையின் அருமை தெரியும்?

தாங்கள் எங்கள் நிலையத்தினிடத்தில் என்றும் குன்றாத அன்புடயவர்களாக இருக்க வேண்டும். தங்க ளுடைய இளைய நண்பர்களையும் எங்களுக்கு அறிமுகப் படுத்தி வைக்க வேண்டும்.

'உங்கள் பேச்சு வன்மை மேன்மேலும் சிறந்து விளங்குவதாக!” -

எனக்கு இந்தக் க டி த த் ைத ப் படிக்கும்போது உச்சி குளிர்ந்தது. என்ன இருந்தாலும் பொறாமை இல்லாமல் ஒரறிஞர் மற்றோர் அறிவாளியை வியந்து பாராட்டுவது மிகவும் அபூர்வமான குணம்’ என்று எ ன க்கு ள் .ே ள சொல்லிக் கொண்டேன்.

强 豊 2 go сно cర

சில வருஷங்கள் கடந்தன. நான் இப்போது ஒரு "பணக்காரக் குடும்பத்தின் த ைல வ னாக இருக்கிறேன். ஸ்ர்டிபிகேட்” எங்கள் வீ ட் டு ச் சுவற்றிலே தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், பேசுவதென்றால் எனக்கு முள்ளை விழுங்குவது போல இருக்கும்.

ஒரு நாள் எங்கள் ஊரில் நடந்த மாகாநடொன்றில் கெளரவத்தை உத்தேசித்து என்னை வரவேற்புத் தலைவ ராகப் போ ட் டு விட்டார்கள். அச்சிட்ட வரவேற்புப் பத்திரம் ஒன்றை நான் வாசித்தேன். அப்பொழுது என் உடம்பு நடுங்கினதும், வேர்வையில் என் சட்டை நனைந்து போனதும், நடுவிலே என் நா க் கு சுருட்டியடித்ததும் எனக்கு ஸ்ர்டிபிகேட்' தந்தவர்கள் கண்டிருந்தால் பேசாமல் அதை வாங்கிக் கிழித்துப் போட்டிருப்பார்கள்.

என்ன செய்வது? பேச்சு வன்மையைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் எழுதத் தெரியும்; பேச வேண்டுமே - அதுதான் பூஜ்யம்.

ఉషి ထိဒံ ၏ံ

இன்னும் சில வருஷங்களாயின. நான் இப்பொழுது ஒரு ஜில்லா போர்டு தலைவர் பதவியை வகித்தேன். ஒரு சமயம் மதுரையிலே நடைபெற்ற ஒரு சபைக்குத் தட்டுக்