பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 87°

வதாகவே எண்ணினான். பிச்சாண்டிக்குப் பிள்ளை குட்டி இல்லை. அவன்தான் பிள்ளை - இல்லை ; தெய்வத்தின் கிருபையால் கந்தர்வலோகத்திலிருந்து கிடைத்த மாணிக்கம், அவனைக் க வு ண் ட ன் தம்பி’ என்று கூப்பிட்டான் : ஊராருக்கு அ வ ன் செல்லத்தம்பி. செல்லத் தம்பியின் குணங்கள் எல்லோரையும் கவர்ந்தன. அவனது சோம்பலை ஒருவரும் பாராட்டுவதில்லை. மரத்தின் தழைச் செறிவுக்குள் மறைந்திருக்கும் புல்லுருவியைப் போல அது மறைந்து இருந்தது. அவன் சோம்பேறிதான் : துரங்கு மூஞ்சிதான் : ஆனாலும் அ வ னே அவ்வூராருக்கு ஒரு கந்தர்வன், குழந்தைகள், பெண்கள், கிழவர்கள் யாவருக்கும் அவனைக் கண்டால் ஒரு சந்தோஷம்.

செல்லத்தம்பி தன்னுடைய இருபதாவது வ ய சி ல் கவுண்டனூருக்கு வந்தான். வந்து இரண்டு வருஷங்கள் ஆயின. அவன் என்ன சாதி ? யார்? இன்னும் ஒன்றும் தெரியவில்லை. அவன் முகம் ஒரு பெரிய குடும்பத்தில் கெளரவமாக வாழ்ந்த வாழ்க்கையின் சின்னத்தை வெளி யிட்டது. பிச்சர்ண்டிக்கு அவன்மேல் உண்டான பிரேமை அளவு கடந்தது. 'நீ யாரப்பா? எந்த ஊர்?' என்று. அவன் செல்லத்தம்பியை இரண்டு முறை கேட்டதோடு சரி. செல்லத் தம்பி, அதெல்லாம் மறந்துவிட வேணும். கேட்டால் எனக்குக் கஷ்டமாக இருக்கிறது. ந - ன் ஒர். அநாதை. உ ங் க ளு க் கு இஷ்டமாயிருந்தால் இங்கே இருக்கிறேன். என்னாலான வேலையைச் செய்கிறேன், இல்லையென்றால் நான் போய் விடுகிறேன்" என்று அவன் சொன்ன பதில் பிச்சாண்டியைக் கலக்கியது ; கண்ணில் நீர்த்துளியை உண்டாக்கி விட்டது. “அவன் மனத்திலுள்ள கஷ்டத்தை யார் அறிவார்கள்! என்ன கஷ்டமோ . பெற்றவர்கள் என்ன கொடுமைக்கு ஆளாக்கினார்களோ! அல்லது, தாய் தகப்பன்மாரை இழந்து விட்டானோ! எப்படியிருந்தால் என்ன? சுவாமி கொடுத்த வரம். இவன் நமக்குப் பிள்ளை, உயிர், இனிமேல் இவனை விடக். கூடாது' என்று கவுண்டன் நிச்சயித்துக் கொண்டான்.