பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம்

1

பிளிரென்று அறைந்தாள்; குடுகுடுவென்று ஒ டி விட்டாள். அந்த ஒரு கணத்துக்குள் அவள் மார்பு பட படத்ததைப் பார்க்க வேண்டுமே! வெகு வேகமாக மாடிப் படியில் இறங்கி கீழே வந்தாள். உடம்பெல்லாம் வேர்த்து விறுவிறுத்து விட்டது எதையோ திருடி விட்டவளைப் போல் திருதிரு வென்று வி ழி த் த ள். அவளுடைய படபடப்பு அடங்க அரைமணி நேரம் ஆயிற்று. ஆனாலும் முழுவதும் அடங்கின பாடில்லை. நெஞ்சில் ஏதோ ஒரு பெரிய பாரம் அமுக்கியது. செய்யக் கூடாத குற்றம் ஒன்றைச் செய்ததைப் போன்ற உ ண ர், ச் சி; அதை ம ைற க் க ப் பார்த்தாள்: மறக்கவும் பார்த்தாள்; முடியவில்லை.

இனிமேல் வெளியே தலையை நீட்டுவதற்குக்கூட அவளுக்கு யோசனைதான். அவனைக் கண்டு விட்டால் அவன் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன இருந்தாலும் அவன் ஆண் பிள்ளை; தான் பெண்; ஒரு ஆணை அவ்வளவு துணிச்சலாக அறையலாமா? - -

ஆணாயிருந்தால் எ ன் ன ? அவன் செய்த குற்றம் குற்றந்தானே ? அதற்குத் தக்க தண்டனை அளிப்பது. அவசியமல்லவா? அவள் அதை எவ்வளவு சிரத்தையாகப் பாதுகாத்தாள். அது பூக்குமென்று எவ்வளவோ ஆவலோடு எதிர்பார்த்தாள் ! அது பூ த் தது ம், பூத்த புஷ்பத்தைப் பெரிய புதையலைப்போல் பறித்து வைத்துக் கொண்டாள். எட்டு வயசுப் பெண்ணுக்கு அவ்வளவு அ க் த ைற ஒரு. விஷயத்தில் ஏற்பட்டது மிகவும் ஆச்சரியந்தான். அவளுக்கு. அந்த ரோஜாச் செடியினிடம் அபாரமான பிரேமை, அதற்கு உயிர் இருந்து விட் டா ல் அதை ஆயிரம் பாடு

- wo