பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

4

அதன் பயன்

றைவனைப் புகழ்வது நம் கடமை; வாய் படைத்த பயன்; முன்னால் இறைவனால் பெற்ற பயனை நினைந்து நன்றி கூறும் செயல். அது மட்டுமல்ல. இனியும் அதனால் விளையும் பயன் ஒன்று உண்டு. அது என்ன என்று பார்க்கலாம்.

ஆண்டவன் கவியை அன்பால் பிழையறக் கற்றுக் கொண்டவர்கள், சாகுங் காலத்தில் ஒரு பாவி வந்து மிரட்டுவானே, அவனுடைய மிரட்டலுக்குப் பயப்பட வேண்டாம். நம்மிடம் இருக்கும் சொத்தைக் கண்டு அந்தக் காலன் பயப்படமாட்டான். பதவி கண்டும் பயந்து உயிரை விட்டுப் போக மாட்டான். எந்த நிமிஷத்தில், எந்தக் கணத்தில் வந்து சுருக்கிட்டு இழுத்துப் போக வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும். அவனை வெல்ல வேண்டுமென்றால் அயில்வேலன் கவியை அன்பால் படிக்க வேண்டும். நன்றாக வாழ்கின்ற காலத்தில் அப்படிப் படிக்காமல் இருந்துவிட்டால், அந்தப் பாவி யமன் வந்து கழுத்தில் சுருக்கிட்டு இழுத்துப் போவானே, அப்பொழுதா படிக்க முடியும்? சாகிற காலத்தில் சங்கரா, சங்கரா என்றால் வருமா? வராது. மனிதனுடைய பழக்கத்தால் உண்டான வாசனை எதுவோ அதுவே சாகிற காலத்தில் முந்திக் கொண்டு நிற்கும்.

அப்போது நினைத்தல்

றைவன் நினைப்புச் சாகிற போது வருமா என்பதை அநுபவத்தில் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கொள்ளலாம். தினந்தோறும் உறங்குகிறோம். உறங்குவதும் ஒரு சாவுதான். "உறங்குவது போலும் சாக்காடு" என்று சொல்லுகிறார் வள்ளுவர். நம்முடைய அநுபவத்தில் நம் நினைவில் என்ன என்னபடுகின்றனவோ அவை கனவில் வருகின்றன.

திருடனைக் கண்டு பயப்படுகிறோம்; திருடனைப் பற்றிக் கேட்டு அஞ்சுகிறோம்; கனவில் திருடன் தோன்றி நம்மை அலற வைக்கிறான். தினந்தோறும் நாம் இறைவனை நினைத்தால் கனவிலும் இறைவன் வருவான். நாம் நினைப்பதில்லை; அவன்

92