பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலின் பெருமை

அந்த வேல் என்ன செய்தது? மூன்று புரங்களையும் எரித்து, அவற்றுக்கு உரியவர்களை நல்லவர்கள் ஆக்கி, தன் பணியாளர்களாக வைத்துக் கொண்ட சிவபெருமானுடைய குழந்தை அல்லவா முருகன்? தகப்பனாரிடம் உள்ள அந்தப் பண்பை அவனிடமும் காணலாம். சூரனுடைய உருவத்தை மாற்றி வேலும் மயிலுமாகக் கொண்டருளினான். இவ்விரண்டும் எதிர்த்தவர்களுக்கு முடிவில் அருள் பாலிக்கும் கருணைய வெளியிடுவன. அதனால்தான் இரண்டையும் இங்கே இணைத்துக் காட்டினார் அருணகிரிநாதர்.

2

வேலின் செயல்

முருகன் கையில் உள்ள வேலே, அதன் கூரிய முனையே, சூரனைச் சங்காரம் செய்துவிட்டதாம்.
                செங்கையில்வேற்
   கூர் அணியிட்டுஅணு வாகிக் கிரெளஞ்சம் குலைந்தரக்கர்
   நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தத; சூர்ப்
   பேரணி கெட்டது; தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே. அந்த வேல் மூன்று காரியங்களைச் செய்தது என்று சொல்வதோடு, அதனால் தேவேந்திர லோகம் பிழைத்தது என்று மங்களமாக முடிக்கிறார்.

அந்த மூன்று காரியங்கள் என்ன? கிரெளஞ்சம் குலைந்தது; அரக்கர் படை குலைந்தது; சூரன் தலைவனாக இருந்து நடத்திய பெரும் படையும் கெட்டது.

கிரெளஞ்ச சங்காரம்

'னுவாகிக் கிரெளஞ்சம் குலைந்து': கிரெளஞ்ச மலை அணு அணுவாகிக் குலைந்து போயிற்றாம். அணு என்று கண்ணுக்குப் புலப்படாத மிகச் சிறிய பொருளைக் குறிப்பார்கள். பெரிய பொருளை மலை போல இருக்கிறது என்று சொல்வார்கள். கிரெளஞ்சம் என்பது அன்றில் என்ற பறவையின் பெயர். அது நெய்தல் நிலத்தில் இருக்கும். பனை மரங்களில்

111