பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
வேலின் பெருமை

இருந்த குகைக்குள் செல்வார்கள். அந்தச் சமயம் பார்த்து அவன் அதை மூடிக் கொண்டுவிடுவான். அவ்வளவுதான்; உள்ளே போனவர்கள் அத்தனை பேரும் நசுங்கிச் செத்துப் போவார்கள். இது கிரெளஞ்சாசுரன் வேலை. இந்த அசுரனது சூழ்ச்சி நாளடைவில் எல்லோர்க்கும் தெரிந்தது. தேவர்களுக்கும் தெரிந்தது. அவர்கள் இறைவனிடம் முறையிட்டார்கள். இந்தக் கிரெளஞ்ச மலையைத் தன் கையிலுள்ள வேலினால் அணு அணுவாகக் குலைத்தான் முருகன். அவன் செங்கையில் உள்ள வேலின் கூரானது அண்ணியிட்டு, அணுக, கிரெளஞ்ச மலை குலைந்தது.

அசுர சங்காரம்

தற்குப் பிறகு தாரகாசுரனாகிய யானை முகன் தன் படையுடன் வந்தான். பின்பு சிங்கமுகாசுரன் வந்தான். முருகனது கூர்மையான வேல் அவர்களையும் சங்காரம் செய்துவிட்டது. சூரனுக்குத் துணையாக இருந்த கிரெளஞ்சம் குலைந்தது என்றவுடனேயே அசுரக் கூட்டதிற்குத் திகில் வந்துவிட்டது. அடுத்துத் தாரகன் முதலிய அசுரர் நேரே அணிவகுத்து வளைந்த படையும் நிலை குலைந்தது.


   அணுவாகிக் கிரெளஞ்சம் குலைந்து அரக்கர்
   நேரணியிட்டு வளைந்த கடகம் நெளிந்தது; சூர்ப்
   பேரணி கெட்டது.

சூரசங்காரம்

சூரனே போர்க்களத்திற்கு வந்துவிட்டான். மயிலின் மேல் சின்னஞ்சிறு குழந்தையாக வீற்றிருக்கிற இளமுருகனைப் பார்த்தவுடன், "இவனா நம் படைகளை எல்லாம் அழிக்க வந்தவன்? இந்தச் சின்னஞ்சிறு குழந்தையை ஒரு நொடியில் என்ன செய்கிறேன் பார்!’ என்று கொக்கரித்தான். வேல் அவன் படையையும் கெடச் செய்தது.

பெரிய போர்கள் மூன்று. பாரதப்போர், ராமாயண யுத்தம், சூரசங்காரம் என்பன அவை. பாரதப் போர் பதினெட்டு நாட்கள் நடந்ததாம். ராமராவண யுத்தம் அதைவிடப் பெரியது; அது பதினெட்டு மாதங்கள் நடந்தது என்பார்கள். ஆனால் சூரசங்காரப்

113