பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/123

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

போர் பதினெட்டு ஆண்டுகள் நடந்தது என்பர். அது எவ்வளவு பெரிய போர் என்பதை அதனால் தெரிந்து கொள்ளலாம். இந்தப் போரிலே தன் சிரிப்பினாலேயே திரிபுர சங்காரம் செய்த சிவ பெருமானுடைய குமாரன் தன் செங்கை வேலினால் முதலில் சூரனது படைக்குப் பெரிய பாதுகாப்பாக அமைந்திருந்த கிரெளஞ்ச மலையை அணு அணுவாகிப் போகும்படி குலைத்தான். பின்பு மற்ற அசுரர் படைகளை ஒழிந்து போகும்படி செய்தான். கடைசியில் சூர்ப்பேரணி கெடச் சூரனையும் சங்காரம் செய்தான். சூரன் அழிந்து ஒழிந்தான் என்று இதில் சொல்ல வில்லை. அவனுடைய பேரணி கெட்டது என்று மாத்திரம் சொன்னார். ஆனாலும் அதைக் குறிப்பாகச் சொன்னதாகவே கொள்ள வேண்டும்.

சூர சங்காரத்தை அருணகிரிநாதர் இந்தப் பாட்டிலே மூன்று பகுதியாகச் சொன்னார்; முதலில் கிரெளஞ்ச சங்காரம்; அடுத்தது தாரகாசுரன் முதலிய அசுரர்களுடைய படைகளின் அழிவு; கடைசியாகச் சூரனுடைய அழிவு. .

தேவர் பெற்ற வாழ்வு

பிறருக்குத் துன்பம் விளைவித்து வந்த அசுரர்களை எல்லாம் அழித்தான் முருகன். அதனால் பயன் பெற்று வாழ்ந்தவர் யார்?
   தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.
சூரன் தன் படையைக் கொண்டு தேவேந்திர லோகத்தைக் கைப்பற்றித் தேவர்களைச் சிறையில் அடைத்தான். தேவர்கள் இதுவரையிலும் செய்து வந்த தொழில்களைச் செய்ய வொட்டாமல் தடுத்தான். அவர்களுடைய இன்ப வாழ்க்கையைக் குலைத்தான்; சுதந்தரத்தைக் குலைத்தான். புரமெரித்தான் மகனுடைய கையிலுள்ள வேல், சூரனையும், அவனுடைய அசுரப் படைகளையும் குலைத்தவுடனே தேவர்கள் சுதந்தரம் பெற்றார்கள், தேவேந்திர லோகம் பிழைத்தது.

அசுர சம்பத்தும் தேவ சம்பத்தும்

னிதர்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவரிடமும் சூரசங்காரம் நிகழ வேண்டும். ஒவ்வொரு மனிதனுடைய மனத் திலும் இருக்கின்றவை அசுர சம்பத்தாகிய தீய குணங்கள். தேவ

114