பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1


   நேர்அணி யிட்டு வளைந்த
   கடகம் நெளிந்தது; சூர்ப்
   பேர்அணி கெட்டது, தேவேந்த்ர
   லோகம் பிழைத்ததுவே.

(பூமியாகிய தேரை அலங்காரஞ் செய்து திரிபுரங்களை எரித்த சிவபெருமானுடைய மகனாகிய முருகனது செங்கையிலுள்ள வேலின் கூரானது, நெருங்கிச் செல்லச் செல்ல, கிரெளஞ்ச மலை அணுவாகிப் பொடியாகிக் குலைய, அசுரர்கள் நேரே அணி வகுத்துச் சூழ்ந்த படை நிலை குலைந்தது; சூரனுடைய பெரிய வியூகம் கெட்டது; தேவேந்திரனுக்குரிய உலகம் உய்ந்தது.

அணியிட்டு-அலங்காரம் செய்து. கூர்-கூரிய துணி. அணியிட்டு-அண்ணியிட்டு; நெருங்கி; நெருங்க எனக் கொள்க; எச்சத்திரிபு. கிரெளஞ்சம் அணுவாகிக் குலைந்தது. அரக்கர் என்றது இங்கே அசுரரைச் சுட்டியது. நேர்-நேராக. அணியிட்டு-அணியாக வகுத்து. கடகம்-படை. பேர் அணி-பெரிய படை வகுப்பு.)

120