பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1


நான் எப்போதும் எதையாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்று எண்ணி என்னைத் தூண்டி ஊக்கமூட்டி வரும் அன்பர் ஸ்ரீ ரா. ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்கள் இந்த வரிசை மலர்வதற்கு நீர் வார்க்கிறவர். அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சொற்பொழிவு வரிசையைப் பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நிகழ்த்தும்படி பணித்து என்னை இப்பணியில் புகச் செய்த ஆலயக் காப்பாளர் ஸ்ரீ சந்திரசேகரன், ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ திருவேங்கட நாயகர் முதலியவர்களுக்கும் வாரந்தோறும் இச்சொற்பொழிவுகளைக் கேட்டு ஊக்கமூட்டிவரும் அன்பர்களுக்கும் என் நன்றி உரியதாகும்.

முருகன் திருவருளால் கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள் இனிது நிறைவேறுமென்று நம்புகிறேன்.


கி.வா. ஜகந்நாதன்01.01.1956