பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஐந்து பகைவர்

பதில்லை. "ஹோட்டலுக்கு வா; ஜிலேபி போட்டிருக்கிறார்கள்" என்று இவனைத் தூண்டி அங்கே இழுத்துப் போய்க் காசு கொடுத்து ஜிலேபியை வாங்கித் தின்னச் சொல்லி விட்டு, வீட்டுக்கு வந்து வாந்தி எடுக்கச் செய்கிறது.

இப்படியாக, இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கிற நாம், நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்று விரும்பினாலுங் கூட, இந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லிக் கொள்ளுகிற ஐந்து இந்திரியங்களும் நம்மை அந்த அந்தக் காரியங்களைச் செய்யவொட்டாமல் தடுக்கின்றன. "ஆண்டவன் கோயிலுக்குப் போகலாம்; அவன் திருவுருவத்தைத் தரிசிக்கலாம்; அதனை மனத்திலே தாங்கிச் சிறிது நேரம் தியானம் செய்யலாம்” என்பன போன்ற நினைப்புக்கள் நமக்கு வந்தாலும், அந்த நினைப்பின் படி நடக்கவொட்டாமல், ஐந்து இந்திரியங்களும் நம்மை வேறு வழிக்கு இழுத்துச் சென்று துன்பப்படுத்துகின்றன.

மெய், வாய், விழி, மூக்கு, செவி ஆகிய ஐந்து இந்திரியங்களையும் பொறிகள் என்று சொல்வார்கள். இந்திரியம் என்பது வடமொழி. உலகத்திலுள்ள பொருள்களை எல்லாம் அநுபவிப்பதற்கு இந்த ஐந்து பொறிகளும் உதவுகின்றன. காதாகிய பொறியினால் அநுபவிப்பது சப்தம். கண்ணாகிய பொறியினால் அநுபவிப்பது காட்சிப் பொருள். மூக்காகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது மணம். உடம்பாகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது ஸ்பர்சம். நாக்காகிய பொறியினால் அநுபவிக்கக் கூடியது சுவை.

"சுவையொளி யூறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு"

என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

பல சமயங்களில் மனம் ஒன்றை நினைக்கிறது. நினைப்பதை இந்திரியங்கள் செய்வதில்லை. நல்ல உணவைத்தான் சாப்பிட வேண்டுமென்று நினைக்கிறோம். சாப்பிடுகின்ற பொறி அதனைக் கேட்பதில்லை. நல்ல பொருள்களையே காண வேண்டுமென்று நினைக்கிறோம். ஆனால் காணுகின்ற பொறி காணத் தகாத பொருளைத்தான் காண்கின்றது. இவ்வாறு இந்த உடம்பாகிய வீட்டில் இருக்கின்ற ஐந்து பொறிகளும், நாம் ஏதேனும்

135