பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஐந்து பகைவர்

கிரிநாதர் புலப்படுத்துகிறார். அந்தப் பாட்டின் இரண்டாவது பகுதியில் இறைவனது திருவிளையாடலைச் சொல்லுகிறார்.

முன்னாலே நம்முடைய இருள் விளையாடலைச் சொல்லி விட்டார். இருள் என்பது மாயை, அஞ்ஞானம். நாம் இன்றைக்குச் செய்கிற காரியங்கள் எல்லாம் அஞ்ஞானத்தின் விளைவு. இந்தக் காரியங்களுக்குப் பொறிகளாகிய ஐந்து பேர்கள் துணையாக இருக்கிறார்கள். இன்பத்தை அடைவதற்கு உரிய செயல்கள் என்ன என்னவோ அவற்றை நாம் செய்யலாம் என்று நினைத்தால் இந்த ஐந்து பேர்களும் அதற்குச் சத்துருக்களாக இருக்கிறார்கள்; அநுகூலமாக இருப்பதில்லை. நாம் சில நல்ல காரியங்களைச் செய்ய வேண்டுமென்ற சங்கற்பம் செய்து கொள்ளுகிறோம். ஆனால் அவற்றைச் செய்யவொட்டாமல் இப்பகைஞர் தடுக்கிறார்கள்.

ஒர்தலும் உன்னுதலும்

ங்கெங்கோ அலைந்து திரிகிற இந்த மனத்தை, இறைவனையும் அவன் சம்பந்தமான பொருள்களையும் மாத்திரம் நினைக்கச் செய்வது முதல் படி; இறைவனையே நினைக்கச் செய்வது அதற்கு அடுத்த படி; அதற்கும் மேலான படி இறைவனோடேயே கலந்துவிடுவது.

இதற்கு ஒர் உபமானம் சொன்னால் விளங்கும். சின்னப் பிள்ளை பம்பரம் விடுகிறான். பம்பரத்தில் கயிற்றைச் சுற்றி வெகு வேகமாக விடுகிறான். பம்பரம் சுழலுகிறது. வேகமாக எங்கெங்கோ சுற்றி சுழலுகிறது. அப்படிச் சுழலும்போது, முதலில் வரையறையின்றிப் பலவிதமான வட்டமிட்டுச் சுற்றிய பம்பரம் கடைசியில் ஒர் இடத்தில் வந்து நிற்கிறது. அப்போதும் பம்பரம் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அது ஓரிடத்தில் நிற்கிறது. தூங்குகிறது என்று பிள்ளை சொல்லுகிறான். மனிதன் படுத்துத் தூங்குகிறானே அதைப்போல பம்பரம் தூங்கவில்லை. பல இடங்களில் சுற்றிச் சுழன்று வந்த அது ஒரு குறிப்பிட்ட இடத்தில் நேராக நின்று சுழலுகிறது. அவ்வாறே இறைவனோடு சம்பந்தப்பட்ட பொருள்களை எல்லாம் நினைந்து மனம் சுழலுவதை ஒர்தல் என்று சொல்லலாம். குறிப்பிட்ட ஒரு பொருளை மாத்திரம் நினைந்து

149