பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சுழலுவது இருக்கிறதே அதற்கு 'உன்னுதல்' என்று பெயர். முதலிலே பவலவற்றை ஒர்கிறோம். இறைவன் திருக்கோயில் போக வேண்டும்; அங்கே பாடுகிற திருப்புகழைக் கேட்க வேண்டும்; அங்கே அலங்காரம் செய்து வைத்திருக்கிற மூர்த்தியைக் காண வேண்டும்; அங்கே இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தை வாங்கிச் சாப்பிட வேண்டும் என்றெல்லாம் ஓர்கிறோம். இவை எல்லாம் பல செயல்களாக இருந்தாலும் அவ்வளவும் ஆண்டவன் என்ற பொருளோடு சம்பந்தம் உடையன. அவற்றை எல்லாம் நினைத்தல் ஒர்தல். வெளியில் வரையறையின்றிச் சுற்றித் திரிந்த மனம் இப்போது ஆண்டவன் என்ற பொருளைச் சுற்றியுள்ள வட்டத்திற்குள் சுழலுகிறது.

ஆனால் அது மாத்திரம் போதாது. அதுவே முடிவு அன்று. அதற்குப் பின் இறைவன் திருவடியில் மனம் நின்று சுழல வேண்டும். இறைவன் திருவடியில் துரங்க வேண்டும். மனம் வேறு ஒன்றையும் நினைக்காமல் இறைவனையே நினைந்து அங்கே சுழல வேண்டும். இந்தத் தூக்கத்தைத்தான் தியானம் என்று சொல்வார்கள்.

மூன்று நிலை

ம்பந்தப்பட்ட பலவற்றை நினைப்பது முதற்படி; ஒன்றையே நினைந்து ஒர் இடத்திலே ஆணி அடித்தாற்போல நின்று இறைவனை நினைப்பது தியானம். பின்பு தன்னையே இழப்பது சமாதி. "என்னுடைய பொறிகளாகிய ஐந்து பாவிகள் அப்படிச் செய்ய விடமாட்டேன் என்கிறார்களே!" என்கிறார் அருணகிரிநாதர். ஒரவொட்டார்-உன்னுடைய சம்பந்தமானவற்றை எண்ணிப் பார்க்க விடமாட்டார்கள். உன்னவொட்டார்-உன்னையே மனத்தில் நிறுத்தி ஒருமைப்பாட்டை அடையவும்விட மாட்டார்கள். மலர் இட்டு உன் திருவடியைத் தியானிக்கலாம் என்றாலோ, அதையும் செய்ய விடுவதில்லை.

மலர்இட்டு உனதாள் சேரவொட்டார்

இறைவனுடைய தாளைச் சேர்தலாவது அவன் திருவடியைத் தியானம் செய்தல். அது பிறவியைப் போக்க ஏற்ற வழி. மனக்கவலை நீங்கும் வழி. இங்கே, சேர்தல் என்பதற்குத் தியானம் செய்தல் என்று பொருள் கொள்ள வேண்டும்.

150