பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

சென்று தேவர்உய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக்
கார்உடல் சோரிகக்கக்
கூரகட் டாரியிட் டோர்இமைப்
போதினிற் கொன்றவனே

தேவர் உய்யச் சென்று சூரனை வதைத்தான் முருகன். மற்ற மற்ற அசுரர்களை எல்லாம் கொல்ல முருகன் போகவில்லை. வீரபாகு முதலிய வீரர்கள் பார்த்துக் கொண்டனர். ஆனால் சூரனைச் சங்காரம் செய்ய முருகனே அவன் இருக்குமிடம் சென்றான். எதற்காக? "தேவர் உய்ய" என்கிறார் அருணகிரிநாதர். தேவர்கள் தங்கள் உரிமைகளை எல்லாம் பறிகொடுத்தார்கள்; இன்பமயமாக இருந்த வாழ்க்கை துன்பமயம் ஆகிவிட்டது. அவர்களது வாழ்க்கையை மீண்டும் இன்ப மயமாகக் செய்ய, அவர்கள் உய்யும்படியாகச் செய்ய, முருகன் சூரபன்மன் இருக்குமிடத்துக்குச் சென்றான்.

பகைவன் இருக்குமிடத்திற்கே சென்று, அவனுடைய கோட்டையை முற்றுகை போட்டு, அவன் தோற்று ஒடும்படியாகச் செய்வது பெரிய வெற்றி. பகைவன் தன்னுடைய நாட்டுக்கு வந்து முற்றுகை போடும்போது, அவனைத் தோல்வியுறச் செய்து ஒடச் செய்வது சாமான்ய வெற்றி.

"ஈண்டவன் அடுதலும் ஒல்லான் ஆண்டு.அவர்
மாணிழை மகளிர் நாணினர் கழியத்
தந்தை தம்மூர் ஆங்கண்
தெண்கிணை கறங்கச்சென்று ஆண்டட் டனனே"

என்று ஒர் அரசனைப் புலவர் ஒருவர் பாராட்டுகிறார்.

முருகன் தேவசேனாபதி அல்லவா? அவன் தன்னுடைய இடத்திற்குச் சூரபன்மன் வர அவனோடு போராடி வெல்லவில்லை. அவன் இருக்கிற இடத்திற்கே சென்று போராடினான்.

அவனை வெல்வதற்குத் தன் கையில் உள்ள வேலை விட்டாலே போதும். ஆயினும் முருகன் தானே அவன் இருக்கு மிடத்திற்கு நேரில் சென்றான். காரணம், 'அந்தச் சமயத்திலாவது அவன், மன்னிப்புக் கேட்டுக் கொண்டு நம் காலில் வந்து விழ மாட்டானா?

154