பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குறிஞ்சிக் கிழவன்

உடையவன் ஆனான், முருகன்; ஆகாசத்திற்கு மூலகாரணமாக உள்ள சிதாகாசத்தின் சம்பந்தம் உடையவன் ஆனான். அந்த ஆறு பொறிகளையும் வாயுதேவனும், அக்கினி தேவனும் தாங்கிச் சென்றார்களாதலால் வாயு, அக்கினி ஆகிய இரண்டின் சம்பந்தம் உடையவனும் ஆனான். அக்கினி பொறிகளைக் கங்கையில் விட்டான், கங்கை நீராதலால் அப்புவின் தொடர்பும் முருகனுக்கு அமைந்தது. கங்கை அந்தப் பொறிகளைச் சுமந்து போய்ச் சரவணப் பொய்கையிலுள்ள திட்டில் விட்டான். ஆதலால் பிருதிவியின் சம்பந்தமும் உண்டாயிற்று.

இவ்வாறு சரவணபவன் உலகத்துக்கு வரும்போது உலகத்துக்கு மூலகாரணமாக இருக்கின்ற ஐம்பூதங்களின் முத்திரையைப் பெற்றே வந்தான். ஏன், அப்படி வர வேண்டும்? அந்த முத்திரையைப் பெறாமல் வந்தால் என்ன என்று கேட்கலாம்.

ஓர் ஏழை, சிறு குடிசையில் வாழ்ந்து கொண்டிருக்கிறவன். அவன் குடிசையின் வாயிற்படி மூன்று அடி உயரந்தான் இருக்கிறது. அவனுக்கு நோய் வந்துவிட்டது. அந்தச் சிறு குச்சுக்குள் படுத்து மிகவும் வேதனைப்படுகிறான். அந்த ஊரிலேயே ஒரு டாக்டர் இருக்கிறார். அவர் ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்வதைத் தம் லட்சியமாகக் கொண்டவர். ஏழை நோயினால் வேதனைப்படுகிறான் என்று அறிந்தவுடன், அவன் குடிசையை நோக்கி ஓடி வருகிறார். அவர் உயரமானவர்; ஆறு அடி உயரம் இருப்பார். குடிசையிலுள்ள ஏழையின் நோயைக் குணப்படுத்த வேண்டுமென்று ஓடி வந்தவர், மூன்றடி உயரமேயுள்ள நிலை வாயிலுக்குள் தம் ஆறு அடி உடம்பை வளைத்துக் குனிந்து கொண்டு செல்கிறார். அவர் ஏன் தம் உடம்பை வளைத்துக் கொண்டு போக வேண்டும்? அது மூன்றடி உயர முள்ள கதவுடைய குடிசை. நோயாளியோ உள்ளே இருக்கிறான். அந்த ஏழைக்கு வைத்தியம் செய்ய வேண்டு மென்ற கருணையோடு ஓடி வந்தவராகையால் குடிசையின் வாயிற்படிக்கு ஏற்பத் தம் உடலைக் குறுக்கிக் கொண்டு உள்ளே போகிறார். அதைப் போல, பிறப்பு, இறப்பு ஆகிய துன்பங்களினால் உயிர்கள் பதியை அடைந்து ஆனந்தம் அடைய மாட்டாமல், ஐம்பூதங்களாலான பிரபஞ்சத்திற்குள் சிக்கி வேதனைப்படுவதைப் பார்த்து, அதனைத் துடைக்க வந்த பவரோக வைத்தியநாதப் பெருமான்

175