பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருணகிரியார் செய்த அலங்காரம்

ஒரு குழந்தையும் பிறந்து விட்டால், வயிறு மூன்று ஆகிறது. இப்படி அன்பு விரிய விரிய, மனமும் விரிவடைகிறது. தன்னலமும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போகிறது. எல்லா உயிரையும் தன்னுயிர்போலக் காண்கின்ற நிலை வருகிறது.

ஓர் உபமான வாயிலாக இதைத் தெரிந்து கொள்ளலாம். ஒர் ஆழாக்கு நல்ல பாலிலே இரண்டு ஆழாக்கு, மூன்று ஆழாக்குத் தண்ணீரை ஊற்றினால் அதைச் சுயப்பால் என்று சொல்ல முடியாது; இருந்தாலும் அது பாலாகத்தான் இருக்கும். ஐந்து ஆழாக்கு, ஆறு ஆழாக்குத் தண்ணிரை ஊற்றினால் அப்போது பாலின் வெண்மை நிறம் இருக்கும்; ஆனால் பாலாக இராது; பால்போலத் தோன்றும். 'வெளுத்ததெல்லாம் பால் அல்ல' என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறோம் அல்லவா? பின்னும் தண்ணீரை ஊற்றினால் அது தண்ணிராகவே ஆகிவிடும்; பாலின் நிறங்கூட இருக்காது.

அதைப் போலவே இல்லறத்தில் வாழ்கின்ற ஒருவன் அன்பு நீரை ஊற்றிக் கொண்டே இருந்தால் சுயநலம் என்பது வர வர மறைந்து கடைசியில் உள்ளமெல்லாம் அன்பு வெள்ளமாகும்; தன்னலமே அற்றவனாகப் போய்விடுவான். முதலில் மனைவியிடம் பிறந்த அன்பு விரிந்து குழந்தையிடமும் பின்பு வீட்டிலுள்ளவரிடமும் பரவுகிறது. வீட்டிலிருந்து வீதிக்கு விரிகிறது. கடைசியில் உலகமெல்லாம் விரிந்த அன்பாக ஆகிவிடுகின்றது. இப்படி அன்பு விரிந்துகொண்டே போகப் போக அவனது அகங்காரம் மங்கிவிடுகிறது. அவனைப் பற்றியிருந்த 'யான்', 'எனது' என்ற இரண்டு பற்றுக்களும் அன்புத் தண்ணீர் விட விட, இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்க் கடைசியில் அன்பு மாத்திரம் தெளிவாகப் பரந்து நிற்கின்றது.

பெரியவர்கள் இவ்வாறு அன்பு மயமாக இருந்தனர்; எல்லா உயிர்களையும் தம்முயிர் போலவே கருதினர்; எல்லா உடம்புக்குள்ளும் தாம் நின்று இன்ப துன்பங்களை அடைவதுபோல உணர்ந்தார்கள்; பிற உயிர்களுக்குச் சிறிய தீங்கு ஏற்பட்டாலும் தமக்கு ஏற்பட்ட தீங்கைப் போலவே எண்ணித் துடித்தார்கள்.

நம் வீட்டிலுள்ள சின்னஞ்சிறு குழந்தைக்கு நோய் வந்தால் நாம் தவிக்கிறோம். நம் மனைவிக்கு நோய் வந்து விட்டால் நாம்