பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தனிப்பரமானந்தம்

முருகன் விரும்புகிறபடி குறிப்பறிந்து செய்ய அவள் காத்துக் கொண்டிருக்கிறாள். அவனோ குறச் சாதியில் பிறந்த ஒரு பெண்ணை மணந்து கொள்வதற்காக ஓடி வந்தான்.

அவ்வாறு வந்ததற்குக் காரணம் என்ன?

அழைத்தால் வருவான்

வன் பேரருளாளன். தலையிலே சுமையை உடையவன் எங்கே சுமைதாங்கி, எங்கே சுமைதாங்கி என்று பார்க்க மாட்டானா? அதைப்போலத் தன்பாலுள்ள அருட்சுமையை வாங்கிக் கொள்வார் யார் என்று தேடி ஓடி வருகிறான். தன்னிடம் இருக்கும் அருளை வாங்கிக் கொள்ள ஆயத்தமாய் இருப்பவர்களுக்கு உடனே அருளுகிறான். அவனைக் கூப்பிடும் போதே ஓடிவரச் சித்தமாக இருக்கிறான். நாம்தாம் அவனைக் கூப்பிடுவதில்லை. "உன் கடவுள் எங்கே இருக்கிறான்?" என்று கேட்ட இரணியனுக்குப் பிரதலாதன், 'எங்கும் இருப்பான்' என்று சொன்னவுடனே, "இவன் எந்த இடத்திலும் இருப்பான்" என்று சொல்லி விட்டானே; "இரணியன் தட்டுகின்றது எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் இருந்து வெளிப்பட வேண்டுமே!" என்று எண்ணி நரசிங்கமூர்த்தி, "இரணியன் எங்கே தட்டுவான்? எங்கே தட்டுவான்?" என்று பார்த்துக் கொண்டிருந்தானாம். பிரகலாதன் வார்த்தையைக் காப்பாற்றும் பொருட்டு இரணியன் தட்டும் இடத்திலே எழுந்தருளினான் இறைவன். நாம் அன்பினால் தட்டினால் நம்மைக் காப்பாற்ற அவன் வருவான். நாம் தட்டுவது இல்லை; தட்டுவதாக நினைத்தால் போதாது; நடித்தால் போதாது.

என் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் தந்தி ஆபீசில் வேலை செய்யும் ஒருவர் இருக்கிறார். அவருடைய பிள்ளை தன் தகப்பனார் தந்தி அடிப்பதைப் பார்த்திருக்கிறான். அவரைப் போலவே அவனுக்கும் தந்தி அடிக்க வேண்டுமென்று ஆசை. அவர் தம் வீட்டில் பழகுவதற்காக ஒரு டம்மிக் கட்டையைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார். அந்தப் பிள்ளை அந்தக் கட்டையில், "கடகடகட்டுக்கட்டு" என்று தட்டுகிறான். "நானும் தந்தி அடிக்கிறேன்" என்று அவன் சொல்கிறான். அவன் அடிப்பதை யாராவது கேட்க முடியுமா? வேறு இடத்தில் இருப்பவர் அதைக் கேட்க முடியுமா? வேறு இடத்தில் அதைக்

க.சொ.1-14

201