பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/240

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

அலகை வகுப்பு என்ற மூன்றும் போர்க்களத்தில் பேய்கள் விருந்துண்டு கூத்தாடும் செயலை விரிவாகச் சொல்வன.

ஏழாவது வகுப்பு: பொருகளத்தலகை வகுப்பு திருத்தணிகையில் இருக்கும் ஆறுமுகம் படைத்த ஒருத்தனாகிய இளைய முருகன், நிசிசரர் இளைத்து பதைத்து மடியும்படியாக ஒர் இமைப்பொழுதில் அமர் பொருதான். அவன் அப்படிப் பொருத களத்தில் உள்ள அலகைகளின் செயல்களைச் சொல்வது அது.

அவை ஆனந்தமாகத் தசையைத் தின்கின்றன. பக்கத்தில் நிற்கிற குட்டையான பேய்க்கும் தமக்குப் போக மிஞ்சின தசையைக் கொடுக்கின்றனவாம். அந்தப் பேயும் ஆடுகிறதாம்.

'குதித்து மகிழ்வொடு மிதித்து நடமிடு
குறட்கு மிகுதசை கொடுத்து வருவன"[1]

குதிரையின் இறைச்சியைத் தனித்தனியே குவித்துப் பக்குவமாக அவித்து உண்ணுகின்றன.

"கொழுத்த குரகத இறைச்சி வகைவகை
குவித்து முறைமுறை அவித்து நுகர்வன.[2]

இரத்த ஆற்றிலே குதித்து முழுகி அந்த இரத்தத்தைக் குடித்துக் களிப்போடு வருகின்றன.

"குதித்து முழுகியும் இரத்த நதியிடை
குளித்தும் உணர்வொடு களித்து வருவன."

அவை ஆடுகின்றன; ஆரவாரத்தோடு கூத்தாடுகின்றன.

""தொகுக்கு தொகுதொகு தொகுக்கு தொகுதொகு
தொகுக்கு தொகுவென நடித்து வருவன.”

அடுத்தது செருக்களத்தலகை வகுப்பு. அது, அடவிப் புனத்தில் உற்ற குறமகளுக்கு ஏற்ற மணிப்புயத்தையுடைய ஆறுமுகன், அடல் மிக்க அசுரர்கள் பட்டு விழும்படியாகப் பொருத செருக்களத்தில் அலகைள் செய்யும் செயல்களைச் சொல்வது.

'குதிரைத் திரள்பட் டபிணத் தைஎடுத்
"துதிரப் புனலிற் குளிக்கும் ஒருதிரள்;
230
  1. குறட்கு-குட்டைப் பேய்க்கு. மிகு தசை-தாம் தின்று எஞ்சிய தசை
  2. குரகத இறைச்சி-குதிரை மாமிசம். அவித்து-சுட்டு.