பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

உளத்தில் ப்ரமத்தைத் தவிர்ப்பாய், அவுணர்
உரத்துஉதிரக்
குளத்தில் குதித்துக் குளித்துக் களித்துக்
குடித்துவெற்றிக்
களத்தில் செருக்கிக் கழுதுஆட வேல்தொட்ட
காவலனே!

(வஞ்சனையில் கட்டுண்டு, உண்மையற்ற செயல்களில் அகப்பட்டுத் தவிக்கும் என்னுடைய உள்ளத்தில் உள்ள மயக்கத்தை நீக்கியருள்வாயாக; அசுரர்களின் மார்பிலிருந்து பெருகித் தேங்கிய ரத்தக் குளத்தில் குதித்தும் குளித்தும் களிப்புற்று ரத்தத்தையே குடித்து உனக்கு வெற்றி உண்டான போர்க்களத்தில் இறுமாந்து பேய்கள் விளையாட வேலாயுதத்தை விட்ட பெருமானே!

சளம்-வஞ்சனை. பிணி-கட்டு. ப்ரமம்-மயக்கம். அவுணர்-அசுரர். உரம்-மார்பு. செருக்கி-இறுமாந்து. கழுது-பேய். தொட்ட-பிரயோகம் செய்த. காவலன்-தேவலோகத்தைப் பாதுகாக்கும் பெருமான்.)



1. பின்வரும் கம்பராமாயணப் பாடல்கள் இதனைப் புலப்படுத்தும்.

"வென்றியால் உலகம் மூன்றும்
மெய்ம்மையான் மேவி னாலும்
பொன்றியார் கின்ற தோளைப்
பொதுவற நோக்கும் பொற்பும்
குன்றிஆ அற்ற தன்றே!
இவன்எதிர் குறித்த போரில்
பின்றியான் முதுகிற் பட்ட
பிழம்புள தழும்பின் அம்மா."

என்பது இராமன் கூற்று.

"நாடுள தனையும் ஓடி
நண்ணலார் காண்கி லாமல்
பீடுள குன்றம் போலும்
பெருந்திசை எல்லை யானைக்
கோடுள தனையும் புக்குக்
கொடும்புறத் தழுந்து புண்ணின்
பாடுள தன்றித் தெவ்வர்
படைக்கலம் பட்டென் செய்யும்"

என்பது விபீஷணன் கூற்று.

234