பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

நான் இங்கு விரிவுரையாற்றப் போகின்ற நூலின் பெயர் 'கந்தர் அலங்காரம்' என்பது. கந்தருக்குரிய அலங்காரம் என்பது அதற்குப் பொருள். 'கந்தர் என்பது 'ஸ்கந்த' என்ற வடச் சொல்லின் திரிபு. ஸ்கந்தமாக இருப்பவன் எவனோ அவனே ஸ்கந்தன். ஸ்கந்தம் என்றதற்குப் பற்றுக்கோடு, கம்பம், இணைப்பு முதலிய பொருள் உண்டு. முருகன் பற்றுக்கோடாக இருப்பதனால் கந்தன் என்ற பெயர் பெற்றான். கம்பம்போல இருப்பதனால் கந்தன் ஆனான். இணைந்த பொருளாக இருப்பதனால் கந்தன் என்ற திருநாமத்தை ஏற்றான்.

பற்றுக்கோடு

றைவன்தான் நமக்குப் பற்றுக்கோடாக இருப்பவன். யார் தளர்ந்து கீழே விழுகிறார்களோ, யார் தள்ளாடித் தடுக்கிக் கீழே விழுகிறார்களோ அவர்களுக்குப் பற்றுக்கோடு அவசியம் வேண்டும். அறுபது வயசுக்கு மேற்பட்டவர்கள் கைத்தடி ஊன்றி நடப்பதைப் பார்க்கிறோம். சிலர் தாம் கைத்தடி ஊன்றி நடப்பதாகப் பிறர் எள்ளி நகையர்டக்கூடாதே என்ற நினைவால் கையில் நாகரிகத் தடியைச் சுற்றிக்கொண்டே போவார்கள். இருந்தாலும் தளர்ந்து விழும்போது அதை ஊன்றிக் கொள்ளலாம் என்பதே நோக்கம். தங்க்ளுக்கு தளர்ச்சி ஏற்பட்டு விட்டது என்பதை அவர்கள் உணர்ந்தே அதனை எடுத்துச் செல்லுகிறார்கள். 'இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல்’ என்று வள்ளுவர் அந்தக் கோலைச் சொல்கிறார்.

இவ்வுலகிலுள்ள உயிர்கள் பற்றுக்கோடு இல்லாமல் தளர்கின்ற நிலையில் இருக்கின்றன. அவற்றிற்கு ஏற்ற பற்றுக் கோடு இறைவன். நான் ஓர் இடத்தைச் சார்ந்து இருக்கிறேன்; எனக்கு அவ்விடம் ஒரு பற்றுத்தான். ஒரு மனிதரைச் சார்ந்து வாழ்கிறேன்; அவரும் ஒரு பற்றுத்தான். ஆனால் இறைவனைப் பற்றிக் கொள்ளும் பற்று வேறு. இறைவனாகிய பற்றுக்கொண்டவர்களுக்குப் பிறப்பு, இறப்பு ஆகிய இரு துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.

பிறப்பு, இறப்பு ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட இறைவனைப் பற்ற வேண்டும். இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டுமானால் நமக்குள்ள பிற பற்றுக்களை எல்லாம் அறுக்க

22