பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/329

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


சேவற் பதாகை

1

இயல்புக்கு ஏற்ற கற்பனை

ரு கரிக்கடைக்காரனுக்குக் கொஞ்சம் ஒய்வு நேர்ந்தது. அன்றைக்குக்கடை இல்லாத நாள். தன்னுடைய வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து கொண்டிருந்தான். மெல்ல மெல்லச் சிந்தனை ஒடியது. "நம் கடையில் நூறு கரி மூட்டை வைத்திருக்கிறோம். மழைக்காலம் வரப் போகிறது. அப்போது கிராக்கி அதிகமாக இருக்கும். நூறு மூட்டையும் நல்ல விலைக்குப் போகும். மேலும் அதிகமான மூட்டைகளை வாங்கி வைத்துக் கொண்டால் அப்போது நல்ல விலைக்கு அவற்றை விற்கலாம். கரி மூட்டைகளை நாம் வாங்குவதற்குப் பதிலாக ஒரு சவுக்குத் தோப்பிையே ஏலம் எடுத்துக் கரி சுட்டால் இரண்டு வகையான லாபமும் நமக்கு வராதா?" எனச் சிந்தித்தான். கரி மூட்டைக்காரனுக்குச் சிந்தனை அப்படித்தான் போகும். ஒருவனுடைய தொழில் எதுவோ, அவனுக்கு நாட்டம் எதில் அதிகமாக இருக்கிறதோ, அதுவே அவனது சிந்தனைக்கும் கற்பனைக்கும் ஆதாரம், வேறு வகையான கற்பனை சும்மா இருக்கும்போது எழாது. இது மனித இயல்பு.

ஆனால், குழந்தை இருக்கிறது. அதற்குக் குறிப்பிட்ட ஒரு தொழிலும் இல்லை; வியாபாரம், பணம் சம்பாதித்தல் ஆகியவற்றில் நாட்டம் இல்லை. சும்மா இருக்கும்போது அது எதைப் பற்றி நினைக்கும்? குழந்தைக்கு எதன் மேலும் நாட்டம் இல்லை என்று சொல்ல முடியாது.

குழந்தை பிறந்து அறிவு தோன்ற ஆரம்பித்தவுடன் அதற்கு முழு உருவமாக முதலில் தோன்றுபவள் தாய்தான். பிறகு தகப்பனாரை அறிகிறது. தாய் தந்தையை அறிந்த குழந்தை அவர்களைக் கருவியாகக் கொண்டே உலகிலுள்ளவற்றை அளக்கும். ஒரு