பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

போலீஸ்காரன் தன் குழந்தைக்கு, "ஒர் ஊரில் ஒரு ராஜா இருந்தான்" என்று கதை சொல்ல ஆரம்பித்தால், அந்த ராஜா தன் அப்பாவைப் போலவே தொப்பி போட்டிருப்பான், சொக்காய் அணிந்திருப்பான் என்று நினைக்கும். அதற்குத் தாய் தகப்பனையன்றி உலகமே இல்லை.

அருணகிரிநாதக் குழந்தை

றைவன் சந்நிதானத்தில் அருணகிரியார் குழந்தையாகி விட்டார். தன்னுடையது என்பது எதுவும் இல்லாமல், தன் செயல் அற்று, எல்லாவற்றையும் தாயின் கையில் ஒப்படைத்துவிட்டு இன்ப துன்பம் எல்லாவற்றையும் தாய் வழியே பெறுவது குழந்தை. அம்மா வீதிப் பக்கம் சென்றால் குழந்தையும் தாயுடனே ஒடுகிறது; உள்ளே வந்தால் உள்ளே வருகிறது; படுத்துக் கொண்டால் படுத்துக் கொள்கிறது. இத்தகைய குழந்தையாக அருணகிரியார் ஆகிவிட்டார். அவருக்கு உலகம் எங்கும் வேறு ஒன்றும் தெரியவில்லை. அவர் நினைவு, கற்பனை எல்லாம் இறைவனைப் பற்றியும் அவனோடு தொடர்புடைய பொருள்களைப் பற்றியுமே எழுகின்றன.

உலகிலுள்ள மற்றக் குழந்தைகளுக்கும், அருணகிரிநாதக் குழந்தைக்கும் ஒரு வேறுபாடு. அந்தக் குழந்தைகள் உலகத்தை இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இந்தக் குழந்தையோ அறிந்து கொண்டதை மறந்துவிட்டது. நான்கு ரூபாயை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்தது குழந்தை; திரும்பவும் அந்த நான்கு ரூபாயை எடுத்து செலவழித்துவிட்டது. மற்றொரு குழந்தை பாத்திரத்தில் ஒரு ரூபாய்கூடப் போடவில்லை. எப்படி இருந்தாலும் கடைசியில் இரு பாத்திரமும் காலியாகத்தான் இருக்கும். அதுபோல, உலகிலுள்ள குழந்தைகள் எதையும் அறிந்து கொள்ளாத உள்ளம் உடையன; அருணகிரிநாதக் குழந்தை நன்றாக வளர்ந்து தன் அறிவினால் அறிந்து கொண்டவை அனைத்தையும் மறந்து விட்ட உள்ளம் உடையது. குழந்தைகளின் உள்ளம் மாசு ஏறாத உள்ளம்; முன்பு மாசு ஏறியிருந்தாலும் அவற்றை எல்லாம் துடைத்துவிட்ட உள்ளம் அருணகிரிநாதக் குழந்தையுடைய உள்ளம். எப்படியாயினும் இரண்டும் ஒரேவிதமாகவே இருக்கும்.

நாம் பார்க்கிற இயற்கைக் குழந்தைகள் தம் தாய் தந்தையர்களையே மிகப் பெரியவர்களாக நினைப்பார்கள். யாரை நினைத்

324