பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்காரச் சொற்பொழிவுகள் - 1

கோழி எவ்வளவு பெருமையுடையது! தேவர்கள் பாராட்டும் கோழி அது; தேவ மகளிர் வாழ்த்தும் கோழி.

"கோழி ஓங்கிய வென்றுஅடு விறற்கொடி
வாழிய பெரிது

என சூரர மகளிர் வாழ்த்துவார்களாம். திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் அவ்வாறு சொல்கிறார். அருணகிரிநாதக் குழந்தை இந்த சேவலைப் பற்றிக் கற்பனை செய்ய ஆரம்பித்தது. அந்தக் கற்பனையில் இயற்கையோடு ஒட்டிய பொருத்தம் இருக்க வேண்டுமென்பது அவசியம் அன்று. இது நடக்கும், இது நடக்காது என்று ஆராய்ந்து சொல்வதற்கு அங்கே வேலை இல்லை. இந்த நினைப்பினால் உள்ளம் இன்புறுவதுதான் பயன்.

இப்போது சேவற்கொடியைப் பாராட்டுகிறார் அருணகிரியார்.

வாகனமும் கொடியும்

டவுளர்களுக்கு பெரும்பாலும் எது வாகனமோ அதுவே கொடியாக இருக்கும். சிவபிரானுக்கு வாகனம் இடபம்; கொடியும் இடபந்தான். திருமாலுக்கு வாகனம் கருடன்; கொடியும் கருடன் தான். முருகப்பெருமானுக்கு அப்படி அல்ல. வாகனம் மயில்; கொடி கோழி. மயிலும் கொடியாக இருப்பதுண்டு. கொடி வேறாக இருந்தாலும் வாகனத்துக்கும் கொடிக்கும் ஒரு தொடர்பு உண்டு. சூரபன்மனது பாதி அம்சம் வாகனமாகிய மயிலாகவும், மற்றொரு பாதி சேவல் கொடியாகவும் இருக்கின்றன.

நாத தத்துவம்

யில் வாகனத்தில் மூன்று வகை உண்டென்று பார்த்தோம். கோழிக் கொடியிலும் இரண்டு வகை உண்டு. முதற் கோழி நாதம் என்ற தத்துவம். உலகம் தோன்றுகின்றபோது கடைசியில் வந்து முடியும் தத்துவம் பூமி, பஞ்ச பூதங்களுள் கடைசித் தத்துவம் பிருதிவி. இயங்காமல் இருக்கும் பரமசிவத்தின் உள்ளத்தில் அருள் என்ற இயக்கம் உண்டாகிறது. இயக்கத்தை ஃபோர்ஸ் (Force) என்றும், அதற்குரிய ஆற்றலை எனர்ஜி (Energy) என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். பொருளை மாட்டர் (Matter) என்பர். முன்காலத்தில் இருந்த விஞ்ஞானிகள் பொருள் வேறு, சக்தி வேறு

328