பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-1.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கந்தரலங்கார்ச் சொற்பொழிவுகள் - 1

“சேவலங் கொடியோன் காப்ப
ஏழ வைகல் எய்தின்றால் உலகே"

என்ற அடிகளில் முருகன் ஏந்திய சேவற் கொடியைப் பற்றிய செய்தி வருகிறது. கையில் கோழியைக் கொடியாகப் பிடித்தவன் பாதுகாப்பதால் உலகம் இன்பமான நாளை அடைந்தது என்பது பொருள்.

உலகிலுள்ள எந்தக் கோழி கூவினாலும் வாழ்வு விடிவது இல்லை. ஆனால் எம்பெருமான் திருக்கரத்திலுள்ள கோழி கூவினால் விடிந்துவிடும். கோழி எப்படிக் கூவுகிறது? "கொக்கறு கோ" என்று கூவுகிறது. தமிழ் நாட்டுக் கோழியானாலும் வேறு எந்த நாட்டுக் கோழியானாலும் இப்படித்தான் கூவுகிறது. இந்தக் குரலுக்குத் தமிழில் ஒரு பொருள் இருக்கிறது. கொக்கு என்பதற்கு மாமரம் என்பது ஒரு பொருள். அறு-அறுத்த; கோ-தலைவன் அல்லது கடவுள். ஆகவே “கொக்கறுகோ" என்பது மாமரத்தை அறுத்த தலைவன் எனப் பொருள்படும். மாமரத்தை அறுத்த தலைவன் யார்? சூரபன்மன் ஆகிய மாமரத்தைப் பிளந்த தலைவன் முருகன். இயற்கையாகவே கோழி கூவுகிறது என்றாலும், தமிழர் அந்தக் குரலுக்குப் பொருள் காண்பதன் மூலம் முருகனை நினைக்கிறார்கள். இப்படி நினைத்துக் கோழி கூவுகிறது எனச் சொல்லவில்லை. அக்குரலைக் கேட்கிற பக்தர்களின் உள்ளம் அப்படி நினைக்கிறது. காலையில் நாம் துங்கிக் கொண்டிருக்கும்போது கோழியைப் பார்ப்பதில்லை; அதன் குரலையே கேட்கிறோம். அந்தக் குரல் நமக்கு மாமரத்தை அறுத்த தலைவன நினைக்கச் செய்கிறது.

அன்பும் நினைப்பும்

முருகனிடத்தில் முறுகிய அன்பு ஏற்பட ஏற்பட இப்படி எல்லாம் நினைக்கத் தோன்றும். ஒரு ஜவுளிக் கடையில் ஒரு பையன் வேலையாக இருக்கிறான். பட்டுப் பட்டாடைகள் அந்தக் கடையில் குவிந்து கிடக்கும் போதெல்லாம் அவன் அவற்றை ஏறெடுத்தும் பார்ப்பது கிடிையாது. அவன் ஏதாவது கணக்கைப் போட்டுக் கொண்டே இருப்பான். அவனுக்குக் கல்யாணம் ஆயிற்று. அப்பால் கடைக்குச் சென்றபோது கணக்குப் புத்த்கத்தைத் திறப்பதற்கு முன்பு அங்கே கிடந்த் அழகான புடைவைகளைப்

330